வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் 190 பேர் விருதுநகரில் தனிமைப்படுத்தி கண்காணிப்பு

விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தில் வெளிநாட்டில் இருந்து வந்த 190 பேர் தனிமைப்படுத்தப்பட்டு டாக்டர்கள் குழு கண்காணிக்கிறது.

நாளுக்கு நாள் கொரோனா அச்சம் மக்கள் மத்தியில் அதிகரித்து வரும் நிலையில் விருதுநகர் மாவட்டத்திற்கு வெளி மாநிலம், வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். இவர்களின் வீடு மற்றும் குடியிருப்பு பகுதியில் தினமும் கிருமி நாசினி தெளிக்கப்படுகிறது. வீடுகளில் கண்காணிப்பில் உள்ள வீடு என நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது. சுகாதார இணை இயக்குனர் (பொறுப்பு)பிரகலாதன் கூறுகையில், “வெளிநாட்டில் இருந்து வந்த 190 பேர் அவரவர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்,”என்றார்.

Related posts

Leave a Comment