ராக்கெட் அடுப்பு

தளத்தில் மணலை பரப்பி அதன் மேல் கடப்பா கல் போட்டு பூச்சு பூசியாச்சு. அதன் மேல் “ப “வடிவில் (3 1/2) செங்கற்களை அடுக்கி அதன் மேல் கனமான கிரில் கம்பி வைக்க வேண்டும். அதன் மேல் மீண்டும்” ப ” வடிவில் வைத்து அடுத்தடுத்து நான்கு கற்களை சுற்றி சுற்றி வைக்க வேண்டும்.மண் கொண்டு பூசி சாணம் கொண்டு மெழுக வேண்டும். இணையத்தில் Rocket stove பற்றி தெளிவான காணொளி உள்ளது. குறைந்த விறகில் நிறைய தீ… மற்ற விறகடுப்பு பயன்படுத்துவதை காட்டிலும் ஐந்தாறு மடங்கு அதிக பலன் என்கிறார்கள். முதல்” ப” துளையில் சோளம், கிழங்கு போன்றவைகளை சுட்டுக்கொள்ளலாம். மேலே பாத்திரம் வைத்து சமைப்பதோடு தணலில் க்ரில் செய்யலாம்… சுவரில் கரி படியாது. இன்னும் நிறைய பயன்பாடு உள்ளது என நினைக்கிறேன்…. பயன்படுத்தியதும் சொல்கிறேன்.

Read More

இந்தோனேசியாவில்

கொரோனாவில் பாதிக்கப்பட்டநோயாளிகளுக்கு, சிகிச்சை அளித்த மருத்துவர் ஹேடியோஅலி கொரோனா தொற்றால் உயிரிழந்தார். இந்நிலையில் கடைசியாக தன் வீட்டின் நுழைவுவாயிலில் நின்று தனது மனைவி, குழந்தைகளை சந்தித்து சென்ற புகைப்படம் இணையத்தில் வெளியாகி பார்ப்பவர்களை கண் கலங்க வைத்துள்ளது..

Read More

Vasi Vazhviyal Maiyam வாசி வாழ்வியல் மையம்

Vasi Vazhviyal Maiyam வாசி வாழ்வியல் மையம் வாசி வாழ்வியல் மையம். 2/525 வடமலைசமுத்திரம் ரோடு, கருத்தபிள்ளையூர் to பாபநாசம் அம்பாசமுத்திரம் திருநெல்வேலி 627418 தொடர்பு எண். 9677853412

Read More

Vasi Vazhviyal Maiyam

சிறப்பு 😢🙄 தான் வாழாவிட்டாலும் பரவாயில்லை யாரும் வாழக்கூடாது என்பதில் தெளிவாய் இருக்கிறார்கள் சில படித்த மேதாவிகள்.. ஆனால் இங்கு படிக்காத பூக்கார அம்மாவும், பழக்கடை அண்ணன்களும் எங்களுக்கு வருமானம் இல்லாவிட்டாலும் பரவாயில்லை. அனைவரும் பாதுகாப்பாய் இருங்க என்கிறார்கள்..

Read More

volunteers

தன்னர்வ_இளைஞர்கள் தேவை.. இக்கட்டான நிலை ஏற்படுமெனில் அரசுடன் இணைந்து தன்னார்வலர்களாக பணியாற்ற பதிவுபண்ணியாச்சு கரம்_கோர்ப்போம் தேசம்_காப்போம் இளைஞர்கள் தங்களையும் பதிவுசெய்து கொள்ளுங்கள்… வாய்ப்பு கிடைக்குமெனில் தேசத்திற்காக களப்பணியாற்றுவோம் கிழே உள்ள லிங்கல் பதிவு செய்வோம்.. https://stopcorona.xenovex.com/login?fbclid=IwAR28Q9sSMI8rG9DsFXN2vahXYfRK1TFzpXgLIJljzfPLi051t2meeRghMN4

Read More

மாஸ்க் பற்றாக்குறை

ஸ்ரீவில்லிபுத்துார்:கடைகளில் மாஸ்க் மற்றும் சானிடைசர்கள் பற்றாக்குறை நிலவுவதால் உற்பத்தி இடங்களிலிருந்து அரசே நேரடியாக வாங்கி மக்களுக்கு விநியோகிக்கவேண்டும். கொரோனா நோய் பரவலால் மாஸ்க்குகள் அதிகளவில் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட நிலையில் தற்போது இந்தியாவில் கொரோனா பரவுவதை தொடர்ந்து உற்பத்தி மாஸ்க்குள் அதிகவிலைக்கு விற்கபடுவதாக புகார்கள் எழுகின்றன.இதேபோல் சானிடைசர்களின் வரத்தும், இருப்பும் குறைந்து வருவதால் கூடுதல் விலை உயர்வு ஏற்படுமோ என்ற அச்சம் மக்களிடம் ஏற்பட்டுள்ளது. மாவட்டத்தில் பல்வேறு மகளிர் சங்கங்கள் மூலம் தயாரிக்கபடும் மாஸ்க்குளை, மாவட்டநிர்வாகமே நேரடியாக கொள்முதல் செய்து ரேஷன்கடைகள் மூலம் மக்களுக்கு வழங்கலாம். இதேபோல் சானிடைசர்களையும் வழங்கவும் மாவட்டநிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பது மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Read More

உணவு வழங்கி யுகாதி கொண்டாட்டம்; இளைஞர்களின் புது யுக்தி

ராஜபாளையம்:ராஜபாளையத்தில் யுகாதி கொண்டாட்ட நிகழ்ச்சியை உணவு வழங்கும் நலத்திட்டமாக செய்த இளைஞர்களின் முயற்சி பாராட்டுக்குறியதே. கொரோனா வைரஸ் பரவலை அடுத்து ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதுடன் விழாக்கள் அனைத்தும் தடை செய்யப்பட்டுள்ளன. ராஜபாளையம் பகுதியில் தெலுங்கு வருடப்பிறப்பினை முன்னிட்டு இப்பகுதி இளைஞர்கள் வசூல் செய்த தொகையினை வீணாக்காமல் ஊரடங்கு நிகழ்ச்சியால் பாதிக்கப்பட்டுள்ள ஏழைகள் மற்றும் ஆதரவற்றோர்க்கு உணவு வழங்க முடிவெடுத்தனர்.தர்மாபுரம் மாப்பிள்ளை விநாயகர் நற்பணி மன்ற இளைஞர்கள் ஆயிரம் உணவு பொட்டலங்களை வழங்கினர். மன்ற தலைவர் ராமராஜ் தலைமையில் வழிப்போக்கர்கள், பொது மற்றும் மகப்பேறு மருத்துவமனை, பஸ் ஸ்டாண்டுகள், ரயில்வே ஸ்டேஷன் பகுதிகளில் நோயாளிகள் மற்றும் பாதசாரிகளுக்கு உணவு,பழங்கள், பிஸ்கட், தண்ணீர் பாட்டில் வழங்கினர்.கொண்டாட்டத்திற்காக வசூலித்த தொகையை நலத்திட்டமாக மாற்றிய இளைஞர்களின் செயல் பாராட்டுக்குறியதே.

Read More

ரோட்டோரவாசிகளை தேடி சென்று உணவு வழங்கிய ஸ்ரீவி., தாசில்தார்

ஸ்ரீவில்லிபுத்துார்:கொரோனா முன்னெச்சரிக்கை தடுப்பு பணிகளுக்கும் மத்தியிலும் ரோட்டோரவாசிகளை தேடிசென்று ஸ்ரீவில்லிபுத்துார் தாசில்தர் உணவு வழங்கினார். ஸ்ரீவில்லிபுத்துாரின் பல்வேறு பகுதிகளில் நுாற்றுக்கு மேற்பட்டோர் ரோட்டோரவாசிகள் வசித்து வருகின்றனர். கொளுத்தும் வெயிலிலும், கொட்டும் மழையிலும் ரோடே இவர்களின் வசிப்பிடம். இத்தகையவர்களை கண்டறிந்து உணவு வழங்கும் நல்ல உள்ளங்களும் இருக்கின்றனர்.இவர்கள் உணவு வழங்க தடை விதிக்கப்பட்டு அரசு சார்பில் உணவு வழங்கப்படும் என அறிவிக்கப்படிருந்தது.நேற்று முன்தினம் மாலை 6:00 மணி முதல் ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வந்தநிலையில் பலர் உணவிற்கு தவிக்கும்நிலை ஏற்பட்டது.ஸ்ரீவி., பகுதியில் தவித்த அத்தகையவர்களுக்கு தாசில்தார் கிருஷ்ணவேணி, வருவாய் ஆய்வாளர் பால்துரை மற்றும் ஊழியர்கள் சாம்பார்சாத பார்சல்களை வழங்கினர்.

Read More

விழிப்பு இல்லையே ! தடை உத்தரவு இருந்தும் சுற்றித்திரியும் மக்கள்… நாமும் போலீசார், அரசுக்கு ஒத்துழைப்போமே

விருதுநகர்:விருதுநகர் மாவட்டத்தில் கொரோனா முன்னெச்சரிக்கைகாக அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் தீவிரமடைந்து வரும் நிலையில் பொதுமக்களும் விழிப்பின்றி சுற்றி திரிவதை கைவிடுவதோடு போலீசார், அரசுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டியது ஒவ்வொருவரின் கடமை என்பதை உணரவேண்டும். மாவட்டத்தில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்காக மாவட்ட நிர்வாகம் மத்திய, மாநில அரசுகளுடன் இணைந்து செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மக்கள் வெளியில் நடமாடி கொண்டிருந்தனர். அவர்களை போலீசார் கொரோனா பாதிப்பு குறித்து அறிவுறுத்தி திருப்பி அனுப்பினர். இது மாலை வரை வாடிக்கையாகவே இருந்தது. இதனால் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த அரசு அலுவலர்கள், போலீசார், சுகாதார பணியாளர்கள், நகராட்சி ஊழியர்கள் அதிருப்தி அடைந்தனர். பொதுமக்களின் பாதுகாப்பு நடவடிக்கைகாக தான் அரசு ஊழியர்களும், போலீசாரும் வெளியே இருக்கிறார்கள் என்பதை மக்கள் உணரவே இல்லை.தற்போது பல்வேறு பகுதிகளில் கொரோனா தொற்று அதிகரித்து…

Read More