உணவு வழங்கி யுகாதி கொண்டாட்டம்; இளைஞர்களின் புது யுக்தி

ராஜபாளையம்:ராஜபாளையத்தில் யுகாதி கொண்டாட்ட நிகழ்ச்சியை உணவு வழங்கும் நலத்திட்டமாக செய்த இளைஞர்களின் முயற்சி பாராட்டுக்குறியதே.

கொரோனா வைரஸ் பரவலை அடுத்து ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதுடன் விழாக்கள் அனைத்தும் தடை செய்யப்பட்டுள்ளன. ராஜபாளையம் பகுதியில் தெலுங்கு வருடப்பிறப்பினை முன்னிட்டு இப்பகுதி இளைஞர்கள் வசூல் செய்த தொகையினை வீணாக்காமல் ஊரடங்கு நிகழ்ச்சியால் பாதிக்கப்பட்டுள்ள ஏழைகள் மற்றும் ஆதரவற்றோர்க்கு உணவு வழங்க முடிவெடுத்தனர்.தர்மாபுரம் மாப்பிள்ளை விநாயகர் நற்பணி மன்ற இளைஞர்கள் ஆயிரம் உணவு பொட்டலங்களை வழங்கினர். மன்ற தலைவர் ராமராஜ் தலைமையில் வழிப்போக்கர்கள், பொது மற்றும் மகப்பேறு மருத்துவமனை, பஸ் ஸ்டாண்டுகள், ரயில்வே ஸ்டேஷன் பகுதிகளில் நோயாளிகள் மற்றும் பாதசாரிகளுக்கு உணவு,பழங்கள், பிஸ்கட், தண்ணீர் பாட்டில் வழங்கினர்.கொண்டாட்டத்திற்காக வசூலித்த தொகையை நலத்திட்டமாக மாற்றிய இளைஞர்களின் செயல் பாராட்டுக்குறியதே.

Related posts

Leave a Comment