கடன் தொகையை செலுத்த அவகாசம் கலெக்டரிடம் ஓட்டுனர்கள் முறையீடு

விருதுநகர்:கொரோனா பாதிப்பு எதிரொலியால் கடன் தொகை மாததவணை, வானக வரி செலுத்த அவகாசம் வழங்க கோரி விருதுநகர் உரிமைக்குரல் ஓட்டுநர் தொழிற்சங்கம் சார்பில் கலெக்டர் கண்ணனிடம் மனு அளிக்கப்பட்டது.

மாவட்ட செயலாளர் அழகுராஜா தலைமையில் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: தமிழகம் முழுவதும் கொரோனாவால் ஊரடங்கு அமலில் உள்ளது. வாகனங்கள் இயங்காததால் கடன் சுமை அதிகரித்து தவிக்கிறோம்.இனி மாத தவணை தொகை வேறு செலுத்த வேண்டிய நிலையில் தவிக்கிறோம். நிதி நிறுவனங்களும் கட்டாயப்படுத்தும் சூழ்நிலை உருவாகும் . இதை கருத்தில் கொண்ட 6 மாத கால தவணையை வாகனத்தின் கடன் முடியும் காலத்தில் பெற்று கொள்வதற்கு நிதி நிறுவனங்களுக்கு உத்தரவிட வேண்டும். மக்களை காக்கும் அரசு ஓட்டுனர்களின் குடும்பங்களை காக்க இழப்பீடாக ரூ.20 ஆயிரம் வழங்க வேண்டும். வருடாந்திர வாகனவரியை செலுத்தவும் கால அவகாசம் வழங்க வேண்டும் ,என கேட்டுள்ளனர்.

Related posts

Leave a Comment