கண்காணிப்பு பணியில் போலீசார் சபாஷ் போடும் சமூக ஆர்வலர்கள்

விருதுநகர்:விருதுநகரில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு சமுக ஆர்வலர்கள் பலரது பாராட்டை பெற்றுள்ளனர்.

தமிழகம் முழுவதும் கொரோனா தீவிரமடைந்து வரும் நிலையில் நாடு முழுவதும் பிரதமர் மோடி ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்நிலையில் நேற்று விருதுநகர் மாவட்டத்தில் 1,100 போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். விருதுநகரில் மெயின் பஜார், கடைவீதிகள், முக்கிய சாலை சந்திப்புகளில் போலீசார் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இவர்கள் பொதுநலனின்றி சுற்றி திரிந்த மக்களை வழிமறித்து உரிய தேவை இருப்பவர்களை மட்டுமே அனுப்பிவைத்தனர். மற்றவர்களிடம் மாஸ்க் அணியுங்கள் போன்ற விழிப்புணர்வு வழங்கி வீட்டிற்கு திருப்பி அனுப்பினர். இதோடு ‘மீண்டும் ஊரடங்கை மீறினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்,’ என எச்சரித்தனர். இவர்களின் சேவை சமுக ஆர்வலர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. பொதுமக்களின் நலனுக்காக பணியில் ஈடுபடும் போலீசாருக்கு நாம் செய்யும் உதவியே வெளியில் வராமல் இருப்பதே என்பதை நாம் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.

Related posts

Leave a Comment