மாஸ்க் பற்றாக்குறை

ஸ்ரீவில்லிபுத்துார்:கடைகளில் மாஸ்க் மற்றும் சானிடைசர்கள் பற்றாக்குறை நிலவுவதால் உற்பத்தி இடங்களிலிருந்து அரசே நேரடியாக வாங்கி மக்களுக்கு விநியோகிக்கவேண்டும்.

கொரோனா நோய் பரவலால் மாஸ்க்குகள் அதிகளவில் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட நிலையில் தற்போது இந்தியாவில் கொரோனா பரவுவதை தொடர்ந்து உற்பத்தி மாஸ்க்குள் அதிகவிலைக்கு விற்கபடுவதாக புகார்கள் எழுகின்றன.இதேபோல் சானிடைசர்களின் வரத்தும், இருப்பும் குறைந்து வருவதால் கூடுதல் விலை உயர்வு ஏற்படுமோ என்ற அச்சம் மக்களிடம் ஏற்பட்டுள்ளது.

மாவட்டத்தில் பல்வேறு மகளிர் சங்கங்கள் மூலம் தயாரிக்கபடும் மாஸ்க்குளை, மாவட்டநிர்வாகமே நேரடியாக கொள்முதல் செய்து ரேஷன்கடைகள் மூலம் மக்களுக்கு வழங்கலாம். இதேபோல் சானிடைசர்களையும் வழங்கவும் மாவட்டநிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பது மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Related posts

Leave a Comment