ரோட்டோரவாசிகளை தேடி சென்று உணவு வழங்கிய ஸ்ரீவி., தாசில்தார்

ஸ்ரீவில்லிபுத்துார்:கொரோனா முன்னெச்சரிக்கை தடுப்பு பணிகளுக்கும் மத்தியிலும் ரோட்டோரவாசிகளை தேடிசென்று ஸ்ரீவில்லிபுத்துார் தாசில்தர் உணவு வழங்கினார்.

ஸ்ரீவில்லிபுத்துாரின் பல்வேறு பகுதிகளில் நுாற்றுக்கு மேற்பட்டோர் ரோட்டோரவாசிகள் வசித்து வருகின்றனர். கொளுத்தும் வெயிலிலும், கொட்டும் மழையிலும் ரோடே இவர்களின் வசிப்பிடம். இத்தகையவர்களை கண்டறிந்து உணவு வழங்கும் நல்ல உள்ளங்களும் இருக்கின்றனர்.இவர்கள் உணவு வழங்க தடை விதிக்கப்பட்டு அரசு சார்பில் உணவு வழங்கப்படும் என அறிவிக்கப்படிருந்தது.நேற்று முன்தினம் மாலை 6:00 மணி முதல் ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வந்தநிலையில் பலர் உணவிற்கு தவிக்கும்நிலை ஏற்பட்டது.ஸ்ரீவி., பகுதியில் தவித்த அத்தகையவர்களுக்கு தாசில்தார் கிருஷ்ணவேணி, வருவாய் ஆய்வாளர் பால்துரை மற்றும் ஊழியர்கள் சாம்பார்சாத பார்சல்களை வழங்கினர்.

Related posts

Leave a Comment