ராக்கெட் அடுப்பு

தளத்தில் மணலை பரப்பி அதன் மேல் கடப்பா கல் போட்டு பூச்சு பூசியாச்சு. அதன் மேல் “ப “வடிவில் (3 1/2) செங்கற்களை அடுக்கி அதன் மேல் கனமான கிரில் கம்பி வைக்க வேண்டும். அதன் மேல் மீண்டும்” ப ” வடிவில் வைத்து அடுத்தடுத்து நான்கு கற்களை சுற்றி சுற்றி வைக்க வேண்டும்.மண் கொண்டு பூசி சாணம் கொண்டு மெழுக வேண்டும்.
இணையத்தில் Rocket stove பற்றி தெளிவான காணொளி உள்ளது.

குறைந்த விறகில் நிறைய தீ…
மற்ற விறகடுப்பு பயன்படுத்துவதை காட்டிலும் ஐந்தாறு மடங்கு அதிக பலன் என்கிறார்கள். முதல்” ப” துளையில் சோளம், கிழங்கு போன்றவைகளை சுட்டுக்கொள்ளலாம். மேலே பாத்திரம் வைத்து சமைப்பதோடு தணலில் க்ரில் செய்யலாம்… சுவரில் கரி படியாது. இன்னும் நிறைய பயன்பாடு உள்ளது என நினைக்கிறேன்…. பயன்படுத்தியதும் சொல்கிறேன்.

Related posts

Leave a Comment