கொரோனாவால் வேலை இழப்பு; தவிப்பில் அச்சகங்கள்

ஸ்ரீவில்லிபுத்துார்: கொரோனா பரவலால் அச்சக தொழிலாளர்கள் வேலை இழப்பு மற்றும் பொருளாதார இழப்பிற்கு ஆளாகி உள்ளனர். இவர்களுக்கு பொருளாதார ரீதியாக உதவிட தென்னிந்தியா பிரின்டர்ஸ் அசோசியேஷன் கோரிக்கை விடுத்துள்ளது.தமிழக முதல்வருக்கு அனுப்பிய மனுவில் கூறியிருப்பதாவது; அச்சக உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்களிடையே பொருளாதார ரீதியாக பெரியவேறுபாடு கிடையாது. பெரும்பான்மையான அச்சகங்களில் தினமும் கிடைக்கும் பணிகளை பொறுத்தே வருவாய் ஈட்டி வருகின்றனர். ஊரடங்கால் தொடர்வேலைவாய்ப்பை இழந்து பொருளாதார நெருக்கடியில் தவிக்கிறோம். நிலை சீரடையும் வரை அச்சக உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு வாழ்வூதியம் வழங்கவும், கடன்களை தள்ளுபடி செய்யவும் அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும், என கேட்டுள்ளனர்

Related posts

Leave a Comment