ரேஷன் வினியோகத்தில் பதுக்கல் வேண்டாமே எல்லோருக்கும் எல்லாமும் கிடைக்க வேண்டும்

விருதுநகர்: விருதுநகரில் ரேஷன் வினியோகத்தில் எவ்விதத்திலும் பதுக்கல் இருக்க கூடாது. எல்லோருக்கும் எல்லாமும் கிடைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை அவசியமாகிறது.

ஊரடங்கு உத்தரவால் சாமானியர்களின் பொருளாதார நிலையை கருத்தில் கொண்டு தமிழக அரசு அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும் ரூ.1,000 ஆயிரம் வழங்க முடிவு செய்துள்ளது. மேலும் அரிசி, பருப்பு உள்ளிட்ட பொருட்களையும் இலவசமாக வழங்க முடிவு செய்துள்ளது. இவை வழங்கும் பணிகள் அனைத்தும் ரேஷன் கடைகள் மூலமாக மேற்கொள்ளப்பட உள்ளது. சாதாரண காலகட்டங்களில் ரேஷன் கடைகளில் அரிசி, பருப்பு வகைகள் பதுக்கல் அதிகமாக இருக்கும். மேலும் கார்டுதரார்கள் சென்று உணவு பொருட்கள் கேட்டால் காலியாகிவிட்டது என்ற பதிலையே ஊழியர்கள் தருவர். 100 கார்டுதாரர்கள் இருக்கும் கடைக்கு தேவையான அளவு அரிசி வந்திருந்தாலும் குறிப்பிட்ட எண்ணிக்கை சென்ற பின் அரிசி உள்ளிட்ட உணவு பொருட்கள் காலியாகிவிடுகின்றன. காரணம் அலுவலர்கள், ஊழியர்கள் மேற்கொள்ளும் பதுக்கல் தான். இதே நிலை தற்போதைய அசாதாரண சூழ் நிலையிலும் நீடிக்க கூடாது. ஆள்நடமாட்டமில்லை என்பதற்காக அரிசி உள்ளிட்ட உணவு பொருட்களை பதுக்க கூடாது. இந்நேரத்தில் பொதுமக்களின் சேவை தான் முக்கியமானது. ஆனால் இம்மாதிரியான நேரத்தை பயன்படுத்தி திருடும் அலுவலர்களும், ஊழியர்களும் உள்ளனர். ஆகவே இவர்களை கண்காணிக்க மாவட்ட வழங்கல் துறை, குடிமைபொருள் வழங்கல், குற்றப்புலனாய்வு போலீசார் முன்வர வேண்டும். மக்களுக்கு தேவைக்கு அரசு முன்னெடுக்கும் நடவடிக்கைகளுக்கு தடையாக உள்ளவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பதுக்கினால் புகார் தரலாம்ஊரடங்கு கால கட்டத்தில் வாகனங்கள் ஓட வாய்ப்பில்லை என்பதால் பெரிய அளவில் பதுக்கல் இருக்க வாய்ப்பில்லை. அதுவும் கொரோனா பாதிப்பு போன்ற ஊரடங்கில் இந்த பதுக்கல் நடவடிக்கைகளை தானாகவே குறைந்து விடும். இருப்பினும் பொருட்கள் இல்லை என ஊழியர்கள் கூறினால் 04562 1077 என்ற எண்ணுக்கு புகார் தெரிவிக்கலாம். மேலும் ஏப்ரல் மாதத்திற்கான பொருட்களை தற்போதே வாங்கி கொள்ளலாம். ரூ.1,000 வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் முழுமையான அறிவிப்பு வந்தவுடன் வீடு வாரியாக டோக்கன் வினியோகிக்கப்படும் .-செல்வக்குமார், மாவட்ட வழங்கல் அலுவலர், விருதுநகர்.

Related posts

Leave a Comment