தமிழக அரசு செம

மொத்தம் 10 மாவட்டம்.. 8 கி.மீ எல்லை.. வீடு வீடாக விசிட்.. பிளான் கன்டெய்ன்மென்ட்.. தமிழக அரசு செம சென்னை: தமிழகத்தில் 10 மாவட்டங்கள், சுகாதாரத்துறை கட்டுப்பாட்டின்கீழ் வருகிறது. வீடு வீடாக ஊழியர்கள் சென்று மக்களிடம் உடல் பரிசோதனை நடத்த உள்ளனர். சென்னையில் இன்று, சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: 1500 மாதிரிகளை பரிசோதித்ததில், 41 பாஸிடிவ், 61 மாதிரிகளுக்கு இன்னும் சோதனை நடக்கிறது. தனிமைப்படுத்து இருப்பவர்கள் வீட்டுக்கு வெளியே ஸ்டிக்கர் ஒட்டி உள்ளோம். 43 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் அடையாளம் காணப்பட்டு வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். முன்பு தமிழக ஏர்போர்ட்டில் யார்யாரை ஸ்க்ரீன் செய்தோமோ, அவர்களின் பயண வரலாறு, அவர்கள் தொடர்பு கொண்டவர்கள் ஆகியோர் பெயர்களைத்தான், லிஸ்ட் எடுத்தோம். வேறு மாநிலம் இப்போது, வேறு எந்த ஒரு மாநில விமான நிலையத்திலும்,…

Read More

COVID-19 – Awareness Meeting

மாண்புமிகு #தமிழகமுதல்வர் #எடப்பாடியார் அவர்கள் ஆணைப்படி #விருதுநகர் மாவட்டத்தில் #கொரோனா விழிப்புணர்வு நடவடிக்கை மற்றும் செயல்பாடுகள் குறித்து #பால்வளத்துறை அமைச்சா் #கேடிராஜேந்திரபாலாஜி அவர்கள் #மாவட்டஆட்சியர் #கண்ணன் அவர்களுடனும் மற்றும் #சட்டமன்ற உறுப்பினர்கள் #MSRராஜவர்மன் மற்றும் #சந்திரபிரபா அவர்களுடனும் மற்றும்அதிகாரிகளுடன் இணைந்து ஆலோசனை நடத்தினார்கள் ✌ … …

Read More

இன்றைய சேவை (27-03-2020)

இன்றைய சேவை (27-03-2020) உணவு கொடுப்போம் உயிர் காப்போம் –சிவகாசி தாலுகா அலுவலகம் உயர்திரு. தாசில்தார் ஐயா அவர்களின் அனுமதியின் படி., நமது அன்பால் இணைவோம் இளைஞர் நலச்சங்கம் சார்பாக சிவகாசி மற்றும் திருத்தங்கல் போன்ற பகுதிகளில் சாலை ஓரங்களில், ஆதரவு இல்லாமல் இருக்கும் உறவுகளுக்கு இன்று காலை 50 உணவுகள் வழங்கப்பட்டது. அண்ணன். தமிழ்செல்வன் மற்றும் அவர்களின் உறவினர்களின் உதவியால் காலை 50 உணவு தயார் செய்து கொடுத்து உதவி செய்தார்.. அவர்களுக்கு அன்பால் இணைவோம் சார்பாக நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம். இந்த சேவையில் நமது சேவை உறவுகள் அன்பால் இணைவோம் சதீஷ்குமார் மாற்றத்தை விதைப்போம் தம்பி கிருஷ்ண குமார் ஆகியோரின் உதவியால் பணி சிறப்பாக நிறைவுபெற்றது… நமது சேவை தொடரும்…

Read More

sivakasinews

அலட்சியம் ஆபத்து இடம் : சிவகாசி பெரியகுளம் கண்மாய் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக காய்கறி கடைகள். சுகாதாரம், போலீஸ் துறை அதிகாரிகள் கூடுதல் கவனம் செலுத்துவது அவசியம் #sivakasi #market #careless #People #sivakasi.info #sivakasinews.in #virudhunagar.info #therajapalyam.com

Read More

பட்டாசு தொழிலாளர்களுக்கு முன்பணம்; ஆலை உரிமையாளர்களுக்கு தனி தாசில்தார் வேண்டுகோள்

சிவகாசி: கொரோனா முன்னெச்சரிக்கையாக சிவகாசி பகுதியில் பட்டாசு , தீப்பெட்டி ஆலைகள் மூடப்பட்டுள்ளது. தொழிலாளர்கள் வேலைவாய்ப்பின்றி உள்ளனர். பட்டாசு தொழிலாளர்களுக்கு ஆலை உரிமையாளர்கள் தங்களால் இயன்ற அளவு முன்பணம் வழங்க வேண்டும் என தனி தாசில்தார் சீனிவாசன் கேட்டுள்ளார். மீனம்பட்டி சிறு பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்கம் தலைவர் விநாயக மூர்த்தி கூறுகையில், ”தொழிலாளர்களுக்கு ஏற்கனவே சம்பள பணம் கொடுக்கப்பட்டுள்ளது. அரசு வலியுறுத்தலின்படி தொழிலாளர்களுக்கு முன்பணம் கொடுக்க தொழிலாளர்களை ஆலைக்கு வரவழைப்பது சிரமம் என்பதால் தொழிலாளர்களின் வீடுகளுக்கு சென்று பணம் கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அவ்வாறு பணம் கொடுக்க செல்லும் ஆலையின் அங்கீகரிக்கப்பட்ட ஊழியர்களை போலீசார் தடை செய்ய கூடாது. இதற்கு உரிய நடவடிக்கை எடுத்தால் தொழிலாளர்களுக்கு சிரமமின்றி முன்பணம் வழங்கமுடியும் ,”என்றார்.

Read More

நேரம் தகுந்தாற்போல் விலை உயரும் காய்கறிகள்

சிவகாசி: காய்கறி வாங்க பொதுமக்கள் அதிகளவில் கூடுவதால் நேரத்திற்கு தகுந்தாற்போல் காய்கறிகள் விலை ஏறி இறங்குகிறது. அத்திவாசிய பொருட்களான காய்கறி உள்ளிட்டவைகள் தடையின்றி கிடைக்கும் என அரசு அறிவித்தும் பொதுமக்கள் ஒரே நேரத்தில் கூட்டமாக வருகின்றனர். இதை பயன்படுத்தும் வியாபாரிகள் விலையை ஏற்றி இறக்குகின்றனர். காலை நேரத்தில் நார்மலாக இருக்கும் காய்கறியின் விலை மக்களின் வரத்தை பொறுத்து விலையை ஏற்றி விடுகின்றனர். 3 மடங்கு வரை விலை உயர்வதால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். அப்பகுதி மைக்கேல், ”காய்கறி விலை மக்களின் கூட்டத்தை பொறுத்து ஏறுகிறது. விலையேற்றத்திற்கு பொதுமக்களே காரணம். எப்பவும் போல் பொருட்கள் வாங்கினால் விலையேற வாய்ப்பில்லை. ஒரே நேரத்தில் மொத்தமாக வருவதால் விலை ஏறுகிறது. தற்போது பட்டாசு, தீப்பெட்டி, அச்சக தொழில்கள் செயல்பாடததால் தொழிலாளர்கள் வருமானமின்றி உள்ளனர். இந்நிலையில் பொருட்களின் விலையேற்றத்தால் அவர்கள் பெரிதும் சிரப்படுகின்றனர். பொருட்களின்…

Read More

ஸ்ரீவி., காய்கறி கடைகள் மீண்டும் இடம் மாறுது

ஸ்ரீவில்லிபுத்துார்: கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஸ்ரீவில்லிபுத்துார் பென்னிங்டன் காய்கறி மார்கெட்டில் மக்கள் அதிகளவில் கூடினர். இதையடுத்து நேற்று காலை பஸ் ஸ்டாண்டிற்கு இடமாற்றம் செய்யபட்டும் மக்கள் நெருக்கடி நிலவியது. இந்நிலையில் ஸ்ரீவில்லிபுத்துார் தாலுகா அலுவலகத்தில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக ஆலோசனை கூட்டம், உதவிகலால் அலுவலர் முருகன் தலைமையில் நடந்தது. எம்.எல்.ஏ.,சந்திரபிரபா, ஒன்றிய தலைவர் ஆறுமுகம், ஒன்றிய கவுன்சிலர் முத்தையா, ஒன்றிய துணைத்தலைவர் ராஜேஸ்வரி,டி.எஸ்.பி., ராஜேந்திரன், நகராட்சி, ஊராட்சி ஒன்றியம், மருத்துவம், குடிமைப்பொருள் வழங்கல் துறை உட்பட பல் துறை அதிகாரிகள் பங்கேற்றனர். மக்கள் நெருக்கத்தை குறைத்து நோய் பரவலை தடுக்கும் விதத்தில் காய்கறிகடைகளை மீண்டும் இடமாற்றம் செய்யவும் அனைத்து பகுதிகளில் துாய்மைபணிகள் மேற்கொள்வது, கட்டடம் மற்றும் விவசாய பணிகளில் அதிகளவில் தொழிலாளர்கள் ஈடுபடுவதை நிறுத்துவது, ஏப்.2 முதல் வழங்கப்படும் நிதி உதவியை எப்படி வழங்குவது குறித்து…

Read More

சிவகாசியில் தடையை மீறி குவிந்த மக்கள் தடையை மீறி குவிந்த மக்கள்

சிவகாசி: ஊரடங்கு உத்தரவு இருந்தும் சிவகாசியில் நேற்றும் அத்தியாவசிய தேவைகளை வாங்க மக்கள் அதிகம் வந்ததால் பகல் 1:00 மணி வரை நடமாட்டம் இருந்தது. கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் நேற்று முன்தினம் அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்காக சிவகாசியில் அண்ணாதுரை காய்கறி மார்க்கெட்டிற்கு அதிகளவில் மக்கள் வந்தனர். பகல் 1:00 மணி வரை அதிகளவில் நடமாடினர். அவர்களை போலீசார் அவ்வப்போது எச்சரித்தும் கண்டுகொள்ளாமல் இருந்தனர். ஆனாலும் மாஸ்க் இல்லாமல் வந்த பொதுமக்களை போலீசார் எச்சரித்து அனுப்பினர். இது போல் நேற்றும் மக்கள் அதிகம் குவிந்தனர். போலீசார் மைக் மூலமாக விழிப்புணர்வை ஏற்படுத்தினர். தேவையின்றி திறந்திருந்த ஒரு சில கடைகளையும் அடைக்க வலியுறுத்தினர். கூட்டம் அதிகரிக்க ரோட்டில் தேவையின்றி நடமாடியவர்களை போலீசார் விரட்ட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. இதன் பின் மக்கள் நடமாட்டம் குறைந்தது.மெடிக்கல்…

Read More