இன்றைய சேவை (27-03-2020)

இன்றைய சேவை (27-03-2020)

உணவு கொடுப்போம் உயிர் காப்போம்

–சிவகாசி தாலுகா அலுவலகம் உயர்திரு. தாசில்தார் ஐயா அவர்களின் அனுமதியின் படி., நமது அன்பால் இணைவோம் இளைஞர் நலச்சங்கம் சார்பாக சிவகாசி மற்றும் திருத்தங்கல் போன்ற பகுதிகளில் சாலை ஓரங்களில், ஆதரவு இல்லாமல் இருக்கும் உறவுகளுக்கு இன்று காலை 50 உணவுகள் வழங்கப்பட்டது.

அண்ணன். தமிழ்செல்வன் மற்றும் அவர்களின் உறவினர்களின் உதவியால் காலை 50 உணவு தயார் செய்து கொடுத்து உதவி செய்தார்..
அவர்களுக்கு அன்பால் இணைவோம் சார்பாக நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.

இந்த சேவையில் நமது சேவை உறவுகள்
அன்பால் இணைவோம் சதீஷ்குமார்
மாற்றத்தை விதைப்போம் தம்பி கிருஷ்ண குமார் ஆகியோரின் உதவியால் பணி சிறப்பாக நிறைவுபெற்றது…

நமது சேவை தொடரும்…

Related posts

Leave a Comment