சிவகாசியில் தடையை மீறி குவிந்த மக்கள் தடையை மீறி குவிந்த மக்கள்

சிவகாசி: ஊரடங்கு உத்தரவு இருந்தும் சிவகாசியில் நேற்றும் அத்தியாவசிய தேவைகளை வாங்க மக்கள் அதிகம் வந்ததால் பகல் 1:00 மணி வரை நடமாட்டம் இருந்தது.

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் நேற்று முன்தினம் அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்காக சிவகாசியில் அண்ணாதுரை காய்கறி

மார்க்கெட்டிற்கு அதிகளவில் மக்கள் வந்தனர். பகல் 1:00 மணி வரை அதிகளவில் நடமாடினர். அவர்களை போலீசார் அவ்வப்போது எச்சரித்தும் கண்டுகொள்ளாமல் இருந்தனர். ஆனாலும் மாஸ்க் இல்லாமல் வந்த பொதுமக்களை போலீசார் எச்சரித்து அனுப்பினர். இது போல் நேற்றும் மக்கள் அதிகம் குவிந்தனர். போலீசார் மைக் மூலமாக விழிப்புணர்வை ஏற்படுத்தினர். தேவையின்றி திறந்திருந்த ஒரு சில கடைகளையும் அடைக்க வலியுறுத்தினர். கூட்டம் அதிகரிக்க ரோட்டில் தேவையின்றி நடமாடியவர்களை போலீசார் விரட்ட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. இதன் பின் மக்கள் நடமாட்டம் குறைந்தது.மெடிக்கல் ஷாப், மருத்துவ மனைகள் வழக்கம்போல் இயங்கின. நகர் பகுதி மக்கள் ஒரளவிற்கு நடமாட்டம் இல்லாமல் இருந்த நிலையில் கிராம பகுதிகளிலிருந்துதான் அதிகளவில் மக்கள் வந்திருந்தனர். தினமும் காய்கறிகள் கிடைக்கும் என வலியுறுத்தியும் மக்கள் ஒரே நாளில் அதிகளவில் வருகின்றனர்.

Related posts

Leave a Comment