நேரம் தகுந்தாற்போல் விலை உயரும் காய்கறிகள்

சிவகாசி: காய்கறி வாங்க பொதுமக்கள் அதிகளவில் கூடுவதால் நேரத்திற்கு தகுந்தாற்போல் காய்கறிகள் விலை ஏறி இறங்குகிறது.

அத்திவாசிய பொருட்களான காய்கறி உள்ளிட்டவைகள் தடையின்றி கிடைக்கும் என அரசு அறிவித்தும் பொதுமக்கள் ஒரே நேரத்தில் கூட்டமாக வருகின்றனர். இதை பயன்படுத்தும் வியாபாரிகள் விலையை ஏற்றி இறக்குகின்றனர். காலை நேரத்தில் நார்மலாக இருக்கும் காய்கறியின் விலை மக்களின் வரத்தை பொறுத்து விலையை ஏற்றி விடுகின்றனர். 3 மடங்கு வரை விலை உயர்வதால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.

அப்பகுதி மைக்கேல், ”காய்கறி விலை மக்களின் கூட்டத்தை பொறுத்து ஏறுகிறது. விலையேற்றத்திற்கு பொதுமக்களே காரணம். எப்பவும் போல் பொருட்கள் வாங்கினால் விலையேற வாய்ப்பில்லை. ஒரே நேரத்தில் மொத்தமாக வருவதால் விலை ஏறுகிறது. தற்போது பட்டாசு, தீப்பெட்டி, அச்சக தொழில்கள் செயல்பாடததால் தொழிலாளர்கள் வருமானமின்றி உள்ளனர். இந்நிலையில் பொருட்களின் விலையேற்றத்தால் அவர்கள் பெரிதும் சிரப்படுகின்றனர். பொருட்களின் விலையை அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும்,”என்றார்.

Related posts

Leave a Comment