ஸ்ரீவில்லிபுத்துார்: கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஸ்ரீவில்லிபுத்துார் பென்னிங்டன் காய்கறி மார்கெட்டில் மக்கள் அதிகளவில் கூடினர். இதையடுத்து நேற்று காலை பஸ் ஸ்டாண்டிற்கு இடமாற்றம் செய்யபட்டும் மக்கள் நெருக்கடி நிலவியது.
இந்நிலையில் ஸ்ரீவில்லிபுத்துார் தாலுகா அலுவலகத்தில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக ஆலோசனை கூட்டம், உதவிகலால் அலுவலர் முருகன் தலைமையில் நடந்தது.
எம்.எல்.ஏ.,சந்திரபிரபா, ஒன்றிய தலைவர் ஆறுமுகம், ஒன்றிய கவுன்சிலர் முத்தையா, ஒன்றிய துணைத்தலைவர் ராஜேஸ்வரி,டி.எஸ்.பி., ராஜேந்திரன், நகராட்சி, ஊராட்சி ஒன்றியம், மருத்துவம், குடிமைப்பொருள் வழங்கல் துறை உட்பட பல் துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.
மக்கள் நெருக்கத்தை குறைத்து நோய் பரவலை தடுக்கும் விதத்தில் காய்கறிகடைகளை மீண்டும் இடமாற்றம் செய்யவும் அனைத்து பகுதிகளில் துாய்மைபணிகள் மேற்கொள்வது, கட்டடம் மற்றும் விவசாய பணிகளில் அதிகளவில் தொழிலாளர்கள் ஈடுபடுவதை நிறுத்துவது, ஏப்.2 முதல் வழங்கப்படும் நிதி உதவியை எப்படி வழங்குவது குறித்து முடிவு செய்யபட்டது.