செயல்பாடின்றி உள்ள நீர் மேலாண்மை கமிட்டிகள் இதுவும் அவசியம்தானே 10 ஆண்டுகளை கடந்தும் அமைக்காததால் அல்லல்

ராஜபாளையம்: கண்மாய் பகுதியை சார்ந்துள்ள பாசன நீரைபாகுபாடின்றி பகிர்வதற்காக அரசால் அமைக்கப்பட்ட நீர் மேலாண்மை 10 ஆண்டுகள் கடந்தும்புதிதாக அமைக்கப்படாததால் கடைமடையில் உள்ள பெருமளவு விவசாயிகள் பாரபட்சநிலையை எதிர்கொள்கின்றனர்.

மழையினால் வந்து சேரும் நீர் கால்வாய் மற்றும் ஓடைகளின் மூலம்கண்மாய்களை வந்து சேர்கிறது. ஆண்டாண்டு காலமாக விவசாயிகள் இதை தங்கள்விவசாயத்திற்கு பயன்படுத்தி கொள்கின்றனர்.

மக்கள் தொகை பெருக்கம் உள்ளிட்டகாரணங்களால் கண்மாய் பகுதியில் ஆழ்துளை குழாய்கள் மூலம் நீர் குடியிருப்பு பகுதிகளுக்குகொண்டு செல்லப்பட்டன.

அத்துடன் நீர் வழி ஆதாரங்களிலும் தடுப்புகள் தடுப்பணைகள்கட்டப்பட்டு குடிநீருக்கு முன்னுரிமை எனும் அடிப்படையில் ஆண்டாண்டு காலம் விவசாயம்செய்து வந்த பகுதிகளுக்கும் நீர் பற்றாக்குறை ஏற்படும் சூழல் ஏற்பட்டது.

இதனால் விவசாயிகளுக்குள் தொடர் பிரச்னை ஏற்பட்டதுடன் மடைக்கு அருகிலுல் விவசாய நிலங்கள்வைத்திருப்பவர்கள் எந்தவித தடையுமின்றி அதிக அளவு பயன்படுத்தி கொண்டனர்.கடைக்கோடி விவசாயிகள் நீர் வந்து சேர்வதில் பாதிப்பு அடைந்து வந்தனர்.

இதற்கு தீர்வு காணும் நோக்கில் தமிழக அரசு கடந்த 2009–10 ல்நீர் நிலைக்கமிட்டி, நீர்மேலாண்மை கமிட்டி அமைத்து செயல்பாட்டிற்கு கொண்டு வந்தது. இதற்காக தலைமைஉறுப்பினர்கள் கொண்ட குழு கண்மாய் சார்ந்த பராமரிப்புபணிகள் மேற்கொண்டது. ஆரம்பத்தில் முழு வீச்சில் நடந்த இப் பணிகள் அரசியல்மாற்றங்களால் தற்போது முழுவதுமாக முடக்கப்பட்டுள்ளது.

பற்றாக்குறையாக மாறி உள்ள கண்மாய் நீரினை பகிர்வதில் விவசாயிகளிடையேபிரச்னை ஏற்படுகிறது. பல தலைமுறைகளாக விவசாயம் செய்துவந்தவர்கள் செய்வதறியாது தவிப்பில் உள்ளனர். அதிகரித்து வரும் தண்ணீர் தேவையில்பாரபட்சமின்றி விவசாயம் செய்வதற்கு இக்கமிட்டியின் செயல்பாடு முக்கியமடைந்துள்ளது.

இத்தனை ஆண்டுகள் கடந்தும் புதிய கமிட்டி அமைப்பதற்கான நவடிக்கைகள் பேச்சளவில்நடைபெறும் நிலையில் இப்பணிகளை விரைவு படுத்த வேண்டும் என்பதே அனைத்து விவசாயிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.

சலுகை, தகவல் சேர்வதில் தடை

மக்களின் பேராசையால் நீருக்கும் மனிதர்களுக்கும் உள்ள உறவுகள் அறுந்து வருகின்றன. இவற்றிற்கு உயிரூட்ட கண்மாய்களை காக்க வேண்டும்.இதற்கு கண்மாய் பாசன நீரை நம்பி உள்ள கடைகோடி விவசாயிகளுக்கும் நீர் பகிர்வளித்து அவர்களையும் விவசாயத்தில் நீடிக்க செய்ய வேண்டும். அதற்கு முடங்கி கிடக்கும் கண்மாய் நீர் மேலாண்மை கமிட்டிகளை புதிதாக அமைத்து செயல்பாட்டிற்கு கொண்டு வருவது அவசியம்.இதன் முடக்கத்தால் அரசு சார்பில் வர வேண்டிய சலுகைகள், முக்கிய தகவல்கள் அனைத்தும் விவசாயிகளுக்கு சென்று சேர்வதில் தடை ஏற்பட்டுள்ளது.

– சுப்ரமணியம், விவசாயி, ராஜபாளையம்.


Related posts

Leave a Comment