பட்டாசு தொழிலாளர்களுக்கு முன்பணம்;

சிவகாசி: கொரோனா முன்னெச்சரிக்கையாக சிவகாசி பகுதியில் பட்டாசு , தீப்பெட்டி ஆலைகள் மூடப்பட்டுள்ளது. தொழிலாளர்கள் வேலைவாய்ப்பின்றி உள்ளனர்.

பட்டாசு தொழிலாளர்களுக்கு ஆலை உரிமையாளர்கள் தங்களால் இயன்ற அளவு முன்பணம் வழங்க வேண்டும் என தனி தாசில்தார் சீனிவாசன் கேட்டுள்ளார். மீனம்பட்டி சிறு பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்கம் தலைவர் விநாயக மூர்த்தி கூறுகையில், ”தொழிலாளர்களுக்கு ஏற்கனவே சம்பள பணம் கொடுக்கப்பட்டுள்ளது.

அரசு வலியுறுத்தலின்படி தொழிலாளர்களுக்கு முன்பணம் கொடுக்க தொழிலாளர்களை ஆலைக்கு வரவழைப்பது சிரமம் என்பதால் தொழிலாளர்களின் வீடுகளுக்கு சென்று பணம் கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அவ்வாறு பணம் கொடுக்க செல்லும் ஆலையின் அங்கீகரிக்கப்பட்ட ஊழியர்களை போலீசார் தடை செய்ய கூடாது. இதற்கு உரிய நடவடிக்கை எடுத்தால் தொழிலாளர்களுக்கு சிரமமின்றி முன்பணம் வழங்கமுடியும் ,”என்றார்.

#sivakasi

#virudhunagrar.info

#sivakasi.info

#sivakasinews.in

#therajapalayam.com

Related posts

Leave a Comment