Aruppukottainews

அருப்புக்கோட்டை: கொரோனா வைரஸ் தடுப்பு முன் எச்சரிக்கையாக ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் மக்கள் வீட்டை விட்டு வெளியில் வர கூடாது,அத்தியாவசிய பொருட்கள் மட்டும் வாங்க வர வேண்டும் என்ற கட்டுப்பாடு உள்ளது. இதை கருத்தில் கொண்டு அருப்புக்கோட்டை அருகே பாலவநத்தத்தில் காய்கறி கடை வைத்திருக்கும் நாராயணன் வாடிக்கையாளர்கள் கூட்டம் சேராமல் இருக்க வரிசையில் வர கட்டம் அமைத்துள்ளார். மேலும் முக கவசம் அணிந்தும் விற்பனை செய்கிறார். வாடிக்கையாளர்கள் விரைவில் காய்கறிகளை வாங்கி செல்லும் வகையில் சாம்பார், பொறியல், கூட்டு தயார் செய்யும் விதமாக தக்காளி, கத்தரி, வெண்டை, கேரட், பீன்ஸ், கோஸ், மல்லி செடி உட்பட காய் வகைகளை ஒரு பையில் கட்டி வைத்து 100 ,200 ரூபாய் என விற்கிறார் . வந்தவர்கள் நேரம் செலவிடாமல் உடனடியாக பையை வாங்கி செல்கின்றனர். இதுதவிர காலை 4 :00மணிக்கே காய்கறிகளை பாக்கெட் போட்டு அருகில் உள்ள கிராமங்களுக்கு வேனில் எடுத்து சென்று வீடு வீடாக வழங்குகிறார். இவருடைய நுாதன விற்பனையை அனைவரும் பாராட்டுகின்றனர்.

Related posts

Leave a Comment