kkssr-ramachandran

எனது அருப்புக்கோட்டை சட்டமன்றத் தொகுதி, அருப்புக்கோட்டை ஒன்றியம் பந்தல்குடியைச் சேர்ந்த 106 சில்லறை ஜவுளி வியாபாரம் செய்பவர்கள், தற்போது மும்பை மட்டுங்கா லேபர் கேம்ப்பில் தங்க வைக்கப்பட்டுள்ள செய்தி,
அருப்புக்கோட்டை ஒன்றிய துணைப்பெருந்தலைவர் உதயசூரியன்,டி. நமச்சிவாயபுரம் ஒன்றியக் கவுன்சிலர் வி.பண்டாரசாமி மற்றும் தினமலர் நாளிதழ் மூலம் எனக்கு தகவல் கிடைத்தது.
தகவல் கிடைத்தவுடன் மேற்படி நபர்கள் தங்க வைக்கப்பட்டுள்ள கொலிவாடா தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கேப்டன் தமிழ்ச்செல்வன் அவர்களை நான் அலைபேசியில் தொடர்பு கொண்டு, 106 ஜவுளி வியாபாரிகளின் அன்றாடத் தேவைகள் மற்றும் அவர்களின் பாதுகாப்பு சம்பந்தமாக உதவிட அவரிடம் கேட்டுக் கொண்டேன். அங்கே தங்கியுள்ள ஜவுளி வியாபாரிகளிடமும் பேசி அவர்களுக்கு ஆறுதல் கூறினேன்.
விருதுநகர் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களிடம் பேசி 106 நபர்களும் சொந்த ஊருக்கு திரும்புவதற்கான ஏற்பாடுகள் செய்து வருகிறேன்.

Related posts

Leave a Comment