Narendra Modi Prime Minister of India

கொரோனா வைரசை வெல்ல முழு ஊரடங்கே வழி. எனவே மக்கள் இதனை மீற வேண்டாம். ஊரடங்கால் வீட்டுக்குள் முடங்கி சிரமப்படும் ஏழை மக்களிடம் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன் என பிரதமர் மோடி இன்றைய மன் கி பாத் ரேடியோ நிகழ்ச்சியில் உரையாற்றுகையில் தெரிவித்தார்.
பிரதமர் மோடி மேலும் உரையாற்றியதாவது ; கொரோனா இந்த உலகம் முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதனால் பலர் மடிந்துள்ளனர். இந்த கொரோனாவை, நாம் அனைவரும் ஒன்று பட்டு நின்றால் தான் ஒழிக்க முடியும், கொரோனாவை வெல்ல முடியும். ஊரடங்கு என்பது கொரோனா போரில் வெற்றி பெறவே. நாம் போர்க்கால நடவடிக்கை எடுத்துள்ளோம். ஊரடங்கு முடிவால் மக்கள் சிலர் என்மீது கோபம் அடையலாம்.
ஊரடங்கு ஒன்றே கொரோனாவை ஒழிக்க சிறந்த வழி. கடினமான முடிவே மக்களை காப்பாற்றும். நான் எடுத்திருக்கும் ஊரடங்கு முடிவால் ஏழைகள், தொழிலாளர்கள் பலரும் சிரமப்படுவார்கள் என்பது எனக்கு தெரியும். இருந்தாலும் இந்த கடின முடிவை தவிர வேறு வழி இல்லை. ஏழைகள் படும் சிரமத்திற்கு நான் அவர்களிடம் மன்னிப்பு கோருகிறேன். உடல் நலமே அனைவருக்கும் மகிழ்ச்சி தரும். கீழ்படியாவிட்டால் அனைவரும் பெரும் இழப்பை சந்திக்க நேரிடும். ஊரடங்கை மீற வேண்டாம்.
வீட்டுக்குள் இருக்கும் குழந்தைகள் உள்பட பலரும் சமூகவலைதளம் மூலம் என்னுடன் பகிர்ந்து வருகின்றனர். மக்கள் இசை,தோட்டம், ஓவியம் வரைதல் என நல்லமுறையில் பொழுதை கழித்து வருவதாக அறிந்தேன். இது போல் அனைவரும் நல்ல முறையில் பொழுதை கழியுங்கள். சமூக விலகல் நமக்கு முக்கியம், மக்கள் நிற்பதில் இடைவெளியை பின்பற்ற வேண்டும். தனிமைப்படுத்தப்பட்டவர்கள் சிலர் வெளியே வருவதாக கூறப்படுகிறது. இவ்வாறு நடந்து கொள்ள வேண்டாம்.

இந்த கொரோனாவை ஒழிக்க மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரதுறையினர் அனைவரும் நமது ஹீரோக்கள். அவர்கள் பணியை நாம் பாராட்டுவதுடன் முன்மாதிரியாக கொள்ள வேண்டும். இவ்வாறு மோடி பேசினார்.
இந்த நிகழ்ச்சியில், பிரதமர் மோடியிடம் புனேயை சேர்ந்த டாக்டர் கூறியதாவது: எங்கள் மருத்துவமனையில் 16 பேர் பாதிக்கப்பட்டதில் 9 பேர் நலம் பெற்று வீட்டுக்கு சென்று விட்டனர். 6 அடி தூரம் தள்ளி இருக்க வேண்டும். கைத்துணி வைத்து இரும வேண்டும். அடிக்கடி கைகளை கிருமி நாசினி மற்றும் சோப் கொண்டு கழுவ வேண்டும். இளைஞர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த இளைஞர்கள் மிக சாதாரணமாக எடுத்து கொள்கின்றனர். அலட்சியம் செய்வது நல்லது அல்ல. லேசான பாதிப்பு இருந்தால் அவர்கள் நலம் பெறுகின்றனர். கடுமையான பாதிப்பு இருந்தால் நலம் பெறுவதில் தாமதம் ஆகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
இது போல் கொரோனாவால் பாதித்து நலம் பெற்ற ஆக்ராவை சேர்ந்த அசோக்கபூர் என்ற குடும்பத்திரிடமும் மோடி கலந்துரையாடினார். இதில் அசோக்கபூர் கூறியதாவது: கொரோனா பாதித்த நாங்கள் அனைவரும் நலம் பெற்று விட்டோம். மருத்துவமனையில் டாக்டர்கள், ஊழியர்கள் எங்களை நல்ல முறையில் கவனித்தனர். இவர்களின் பணி மிக சிறப்பாக, வேகமாக இருந்தது. இவர்களுக்குக நாங்கள் நன்றி கடமைப்பட்டுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

Related posts

Leave a Comment