ஒரு வயதில் உயிருக்கு போராட்டம்..

சென்னை: இதயத்தில் ஓட்டை காரணமாக கஷ்டப்பட்டு வரும் சிறுவன் விநாயகமூர்த்திக்கு உங்களால் முடிந்த பண உதவியை செய்திடுங்கள். விநாயகமூர்த்திக்கு 1 வயதுதான் ஆகிறது. ஆனால் இந்த வயதிலேயே அவன் இதய நோயால் அவதிப்பட்டு வருகிறான். அவன் பிறந்த போது மொத்த குடும்பமும் சந்தோசமாக இருந்தது. ஆனால் அவனை வீட்டிற்கு அழைத்து வந்த பின் எல்லோருக்கும் அதிர்ச்சி காத்து இருந்தது.

தொடக்கத்தில் இருந்தே அவனுக்கு மூச்சு விடுவதில் பிரச்சனை, அடிக்கடி காய்ச்சல் ஏற்பட்டது, விடாமல் கஷ்டத்தில் அழுது கொண்டு இருந்தான். அவனை மதுரை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று சோதித்ததில் அவனுக்கு இதயத்தில் துளை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த மருத்துவமனையில் இருந்த மருத்துவர் டாக்டர் கோபி, குழந்தை விநாயகமூர்த்தியை சோதனை செய்துவிட்டு, அவனை ஏன் இவ்வளவு தாமதமாக மருத்துவமனை கொண்டு வந்தீர்கள் என்று கோபமாக பேசினார். அவனுக்கு செய்ய வேண்டிய அறுவை சிகிச்சை குறித்து விளக்கினார். இந்த அறுவை சிகிச்சையை 2 வயதுக்குள் செய்ய வேண்டும். இல்லையென்றால் விநாயகமூர்த்தியின் இதயம் சிகிச்சையை ஏற்றுக்கொள்ள வாய்ப்பில்லை என்று மருத்துவர் கூறிவிட்டார். விநாயகமூர்த்தியின் பெற்றோர் கடவுள் மீது, டாக்டர் கோபி மீதும்தான் நம்பிக்கை வைத்துள்ளனர்.

Related posts

Leave a Comment