Rajapalyam News

ராஜபாளையம் : ராஜபாளையம் அடுத்த செட்டியார்பட்டி பேரூராட்சியில் செயல்பட்டு வரும் காய்கறி சந்தை தனியார் பள்ளி மைதானத்திற்கு மாற்றப்படுவதாக செயல் அலுவலர் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் பொது மக்கள் கூட்டமாக கூடுவதை தவிர்க்க மக்கள் கூடும் சந்தைப்பகுதிகளை திறந்தவெளியிடங்களுக்கு மாற்ற உத்தரவு இடப்பட்டிருந்தது.ராஜபாளையம் உட்பட மாவட்டத்தின் பல பகுதிகளில் இதற்கான இடங்கள் தேர்வு செய்யப்பட்டு இயங்கிவருகிறது. இந்நிலையில் செட்டியார்பட்டி பேரூராட்சி நாயுடு தெற்கு தெருவில் இயங்கி வந்த காய்கறி சந்தை மூடப்பட்டு தளவாய்புரம் ரோட்டில் உள்ள பு.மு.மாரிமுத்து நாடார் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் இயங்க உள்ளது.

இதற்கான முன்னேற்பாடுகளை செயல் அலுவலர் அழகர் மற்றும் தளவாய்புரம் இன்ஸ்பெக்டர் முத்துக்குமரன் பார்வையிட்டு 11 கடைகளுக்கு தேவையான இடங்களை ஒதுக்கி பொதுமக்கள் நின்று வாங்க இடைவெளி குறியீடு ஏற்படுத்தி உ ள்ளனர்.பேரூராட்சி செயல்அலுவலர் அழகர் கூறியதாவது: கடந்த 4 நாட்களாக தகுந்த அறிவுறுத்தல் தெரிவித்தும் பொது மக்கள் மற்றும் வியாபாரிகளிடையே போதிய ஒத்துழைப்பு இல்லை. போலீசார் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடு செய்திருந்தும் கூட்டம் கூடுவதை கட்டுப்படுத்த முடிய வில்லை. இதே நிலை நீடித்ததால் இங்கு செயல்பட்டு வந்த 11 காய்கறி கடைகள் மெயின் ரோட்டில் உள்ள பள்ளி மைதானத்தில் இன்று முதல் இயங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது, என்றார்.

Related posts

Leave a Comment