sattur news

சாத்துார் : சாத்துார் மற்றும் சுற்று கிராமங்களில் தடை புகையிலை பொருட்கள் விற்பனை அதிகரித்து,நோய் தொற்றுக்கு இதுவும் ஒரு காரணமாகிறது.

கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட நிலையில் மக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது. அத்தியாவசிய பொருட்களுக்கான கடைகளே திறக்கப்பட்டுள்ள நிலையில் கிராமங்களில் தடை புகையிலை பொருட்கள் தங்கு தடையின்றி விற்பனையாகிறது. ஒரு புகையிலை பாக்கெட் வாங்கி நான்கு பேர் பகிர்ந்து போடுகின்றனர். இதோடு இவர்கள் கண்ட இடங்களில் எச்சி துப்புகின்றனர். இதன் மூலம் நோய் கிருமி பரவும் அபாயம் உள்ளது.

சாத்துார் சத்திரப்பட்டி பா.ஜ., பிரமுகர் கந்தசாமி கூறியதாவது: தடை புகையிலை பொருட்கள் தாராளமாக கிராம பெட்டிக் கடைகளில் விற்பனையாகிறது. தெருக்களில் கண்ட இடங்களில் எச்சில் துப்புகின்றனர். நோய் பரவும் அபாயம் உள்ளது. இதை தடுக்க உணவு பாதுகாப்பு அதிகாரிகளும், போலீசாரும் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.

Related posts

Leave a Comment