Coronavirus awareness at Srivilliputhur

மக்கள் நலனுக்காக நாங்கள் ஓய்வின்றி துாய்மை பணியில் ஈடுபட்டு வருகிறோம். எங்களுக்கும் சராசரி ஆசைகள் உண்டு. ஆனாலும் மக்களின் நலனே முக்கியம் என்பதால் நகர் முழுவதும் உள்ள குப்பையை தினமும் உடனுக்குடன் அகற்றி வருகிறோம். அனைத்து இடங்களிலும் கிருமி நாசினி தெளித்து வருகிறோம். நகராட்சி சார்பில் எங்களுக்கு மாஸ்க், கையுறை, காலுறை வழங்கப்பட்டுள்ளது.

இதனால் பாதுகாப்பாக பணியில் ஈடுபட முடிகிறது. சிரமமான பணி என்றாலும் சேவை மனப்பான்மையுடன் செய்கிறோம்.- சேதுபாண்டி, துாய்மை பணியாளர் , சிவகாசி.மக்களின் ஒத்துழைப்பு அவசியம்தினசரி துாய்மைபணி என்பது மிகவும் அத்தியாவசியமான பணியாகும். இதனால் குடியிருப்புகள், நகரங்கள் துாய்மை பெறும். தினமும் காலை 6:00 மணி முதல் 11:00, பகல் 2:00 முதல் மாலை 5:00 மணி வரை வெயில் மழை பாராமல் பணியாற்றுகிறோம். ஒவ்வொரு தெருவிலும் வாறுகால்கள் அடைத்து கொள்ளுமளவிற்கு கழிவுகள் கொட்டபடுகிறது. இதனால் பொதுசுகாதாரம் பாதிக்கிறது

. மக்கள் கழிவுகளை வாறுகால்களில் கொட்டுவதை கைவிடவேண்டும். துாய்மைப்பணிக்கு மக்களின் ஒத்துழைப்பு மிகவும் அவசியம்.-கருப்பையா, துாய்மைபணியாளர், ஸ்ரீவில்லிபுத்துார் .துாய்மையே எங்கள் முதற்பணிநகரை துாய்மையாக வைத்து கொள்வது தான் எங்கள் முதற்பணி. தற்போது கொரோனா முன் எச்சரிக்கை நடவடிக்கையாக நாங்கள் நகர் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளோம். முக கவசம், கை, கால் உறை அனைத்தும் வழங்கப்பட்டு அவற்றை அணிந்து தான் பணிகள் செய்கிறோம்.

அனைத்து பகுதிகளிலும் சுத்தமாக கிருமி நாசினி தெளிக்கிறோம். மக்களின் ஒத்துழைப்பும் அவசியமாகிறது. பலர் இந்த நேரத்தில் கூட முகக்கவசம் அணியாமல் செல்வது வருத்தமாக உள்ளது. அரசு எடுக்கும் நடவடிக்கைகளை பார்க்கும் போது கொரோனா பயங்கர தொற்று என்று தெரிந்தும் மக்கள் அலட்சியமாக உள்ளனர். நாங்கள் எந்த நேரத்தில் அழைத்தாலும் பணி செய்ய தயாராக உள்ளோம்.-வீரக்குமார், துாய்மை பணியாளர், அருப்புக்கோட்டை.கூடுதல் பொறுப்புடன் பணிஎப்போதும் பணி செய்வதைவிட இப்போது கூடுதல் பொறுப்புடன் பணிகளை செய்து வருகிறோம்.

கொரோனா வைரஸ் தாக்கத்தால் அச்சத்தில் இருக்கும் மக்களை மற்ற அதிகாரிகளை போல் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு எங்களுக்கும் உள்ளது. குப்பை குறைவாக சேர்ந்தாலும் அவற்றை துாய்மை படுத்தி தொற்று கிருமிகள் பரவாமல் இருக்க பிளீச்சிங் பவுடர், சானிடைசர் தெளித்து வருகிறோம். எங்களையும் பாதுகாத்து கொள்ள முக கவசம், கையுறை அணிந்துள்ளோம். எங்களால் மற்றவர்களுக்கு பரவிவிட கூடாது என்ற அதீத கவனத்தோடு செயல்படுகிறோம்.- மகாலட்சுமி, துாய்மை பணியாளர்,காரியாபட்டி.முழுமையான பரிசோதனைஏற்கனவே செய்து வந்த பணியை தான்தொடர்கிறேன்.

இருப்பினும் உயிர்க்கொல்லி நோய் தொற்று நேரத்தில் பொது மக்களைகாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருவது குறித்து பெருமிதம் கொள்கிறேன். தகுந்தபாதுகாப்பு உபகரணங்களான மாஸ்க், கிளவுஸ், கால்களுக்கு ஷூ போன்றவற்றைஎங்களின் பாதுகாப்பு கருதி தவறாமல் அணிவதுடன் முழுமையான பரிசோதனையும் செய்யப்படுகிறது. பொது மக்களின் பாதுகாப்பிற்கு உதவும்எங்களின் நலனிலும் அக்கறை எடுப்பதால் பயமின்றி உள்ளோம்.

மற்றநேரங்களை விட தற்போது மக்களின் அக்கறை தனிவிதமாக தெரிவதை உணர்கிறோம். இதுவே எங்களின் பணிக்கான உற்சாகமாக உள்ளது.- சித்தன், துாய்மைப்பணியாளர், ராஜபாளையம்.

Related posts

Leave a Comment