சிவகாசி, : கிராம பகுதிகளில் விழிப்புணர்வு இல்லாமல் அனைத்து கடைகளையும் திறந்து வைத்திருப்பதால் கொரோனா தொற்று நோய் பரவ வாய்ப்புள்ளது .
நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் போலீசார் நகர் பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டு கூட்டம் கூடுவதை தடுக்கின்றனர். இதனால் ஓரளவிற்கு மக்கள் நடமாட்டும் கட்டுப்படுத்தப்படுகிறது. ஆனால் கிராமங்களில் அதற்கு வழியில்லை. கிராமங்களில் ஆங்காங்கே டீ கடை, பெட்டிக் கடைகளை திறந்து வைத்து கூட்டம் கூட்டமாக நடமாடுகின்றனர்.
வழக்கம்போல் ஊர் மத்தியில் அமர்ந்து அரட்டையடிக்கின்றனர். இவர்கள் யாரும் சமூக இடைவெளியை கடைபிடிப்பதில்லை. இதை கட்டுப்படுத்தி அவர்களை தனித்திருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.