kt rajendra balaji advice for police

ராஜபாளையம் : ரோந்து பணியை தீவிரப்படுத்துமாறு போலீசாருக்கு அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அறிவுரை வழங்கினார்.

ராஜபாளையம் நகராட்சி அலுவலகத்தில் நடந்த கொரோனா தடுப்பு ஆலோசனை கூட்டத்தில் அவர் பேசியதாவது: தனிமைப்படுத்துதல், சமூக விலகலை தொடர்ந்து கண்காணித்து ரோந்து பணியையும் போலீசார் தீவிரப்படுத்தவேண்டும். வெளிமாநில பணியாளர்களுக்கு அவர்களை பணியில் அமர்த்தியவர்களே உணவு வழங்கி பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். நோய் தடுப்பு நடவடிக்கைகளில் தன்னார்வலர்களை உபயோகிக்க வேண்டும்.

ரேஷன் கடைகளில் பொது மக்கள் கூடுதலை போலீசார் முறைப்படுத்த வேண்டும், என்றார். கலெக்டர் கண்ணன், எம்.எல்.ஏ.,க்கள் ராஜவர்மன், சந்திரபிரபா பங்கேற்றனர்

Related posts

Leave a Comment