சாத்துார் : சாத்துாரில் உழவர்சந்தை வந்த எம்.எல்.ஏ., ராஜவர்மன் காய்கறிகளின் விலையை கேட்டறிந்தார்.
முகக்கவசம் இன்றி வந்தவர்களுக்கு முக கவசம் வழங்கினார். பஸ் ஸ்டாண்ட் சென்ற அவர் கிருமி நாசினி தெளித்து பராமரிக்க கேட்டுக் கொண்டார். அம்மா உணவகம் சென்று பார்வையிட்டார். வெம்பக்கோட்டை பகுதியில் நடைபெறும் நோய் தடுப்பு பணிகளையும் பார்வையிட்டார்.