Awareness of ignorance

சிந்தனையை மாற்றுங்க மாஸ்க் அணிந்தால் கொரோனா வராது நினைப்பில் வலம் அறியாமையால் வெளியே சுற்றுபவர்களால் நோய் தொற்று

விருதுநகர்:மாஸ்க் அணிந்தால் கொரோனா வராது என்பது போல் நினைத்து அறியாமையால் விருதுநகர் மாவட்டத்தில் ஊர் சுற்றும் மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிக்கிறது.

மாவட்டத்தில் தற்போது வரை கொரோனா பாதிப்பு பெரிய அளவில் இல்லை. 14 பேர் விருதுநகர் அரசு மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். கொரோனா பாதித்த ராஜபாளையம் முதியவர் வசித்த பகுதி தடை செய்யப்பட்டு கண்காணிப்பும் தீவிரப்படுத்தப் பட்டு வருகிறது.

இந்நிலையில் பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்கும், பிற விஷயங்களுக்காக நடமாடுவது அதிகரித்துள்ளது. முதியவர்கள் சிலர் காலை வேளைகளில் ஒன்று கூடி நடைபயிற்சி மேற்கொள்கின்றனர். 10 வயது, 60 வயதுக்கு மேற்பட்டோருக்கும் கொரோனா தாக்கும் அபாயம் இருந்தும் வெளியே நடமாடுகின்றனர்.

மாஸ்க் அணிந்து சென்றால் கொரோனா பாதிப்பு ஏற்படாது என்ற அசட்டு தைரியத்தில் இவ்வாறு செய்கின்றனர். ஆனால் கூட்டமாக சுற்றுவதை பற்றி துளியளவும் கருத்தில் கொள்வதே இல்லை. நாடே கொரோனா பாதிப்பில் 3 வது நிலையில் உள்ளது. ஊரடங்கின் முதல் இரு நாட்களில் வெளிவராத மக்களும் தற்போது பொருட்கள், நொறுக்குதீனிகள் வாங்குவதற்காக வெளியே சுற்றி திரிகின்றனர். இவர்களை போலீசாரும் முறையாக கண்டிப்பதில்லை.பல இடங்களில் போலீசார் பணியில் இருப்பதே இல்லை. இதை தடுக்க மாவட்ட நிர்வாகம் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

அறியாமை போக்கி விழிப்புணர்வு

Related posts

Leave a Comment