Presentation of Antibiotic Powder to Home

விருதுநகர்:வீடுகளுக்கு இன்று முதல் கிருமி நாசினி பவுடர் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக விருதுநகர் நகராட்சி கமிஷனர் பார்த்தசாரதி கூறினார்.

அவர் கூறியதாவது:விருதுநகர் நகராட்சி வார்டுகளில் தீயணைப்பு வாகனங்கள், தனியார் லாரிகள் மூலம் கிருமி நாசினி தெளிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் நகராட்சி சார்பில் 150 ஊழியர்கள் நியமிக்கப்பட்டு வீடு வீடாக சென்று சர்வே செய்கின்றனர்.

காய்ச்சல், சளி குறித்து விவரம் சேகரிக்கின்றனர். இன்று முதல் நகராட்சி பகுதிகளில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் துப்புரவு ஊழியர்கள் மூலமாக கிருமிநாசினி (பிளீச்சிங்) பவுடர் வழங்கப்படுகிறது. இதை வீட்டின் வளாகம், வாசலில் தெளிக்குமாறு தெளித்து பாதுகாப்பை பலப்படுத்தி கொள்ளுங்கள்,என்றார்.

Related posts

Leave a Comment