Sivakasi is a school girl who finances poverty

வறுமையிலும் நிதி கொடுத்த சிவகாசி பள்ளி சிறுமி

கொரோனா நிவாரண நிதிக்காக சிவகாசியில் அச்சக தொழிலாளியின் மகள் தன்னுடைய சேமிப்பு பணம் 1000 ஐ சப்கலெக்டரிடம் வழங்கினார். சிவகாசி அனந்தப்பநாடார் தெருவை சேர்ந்த சேர்மக் கனி இறந்த நிலையில் இவரது மனைவி கலாவதி அச்சகத்தில் கூலி வேலை செய்கிறார். இவரது மகள் லலிதா 13, சிவகாசி எஸ்.எச்.என்.வி., மேல்நிலைப் பள்ளியில் 8ம் வகுப்பு படிக்கிறார். இவர் இரு ஆண்டுகளாக சேமித்து வைத்திருந்த ரூ. 1000 ஐ கொரோனா நிதிக்காக சப்கலெக்டர் தினேஷ்குமாரிடம் வழங்கினார். வறுமையிலும் சேமிப்பு பணத்தை அரசுக்கு கொடுத்த சிறுமியை பொதுமக்கள் பாராட்டினர். சிறுமி லலிதா, ”எனதுஅம்மா அவ்வப்போது செலவிற்காக ரூ. 1, 2 என கொடுப்பார். அதை சேமித்து வைத்தேன். இதை கொரோனா நிதிக்காக கொடுத்துள்ளேன். இதற்காக எனது அம்மா என்னை வாழ்த்தினார், என்றார். இவரை நாமும் பாராட்டலாமே! …

Related posts

Leave a Comment