#corona #coronavirus #prevention #NTK #NaamTamilar #NaamTamilarKatchi

#நாள்9:

நிகழ்வு 1: இன்று 4ஆவது நாளாக காலை 8:15 மணிக்கு மஞ்சள், உப்பு, வேப்பிலை, தண்ணீர் கலந்த கிருமிநாசினி ஆவணி தெருவின் ஒரு பகுதியில் 35 வீடுகளுக்கு நாம் தமிழர் கட்சி – Naam Tamilar Katchi சார்பாக தெளிக்கப்பட்டது.
.
பி.கு.: ஒருவர் மட்டுமே 🧍‍♂️இதில் ஈடுபட்டதால் சமூக விலகலும் அரசின் அறிவுறுத்துதலின்படி பின்பற்றப்பட்டுள்ளது.
—————————————————————
நிகழ்வு 2: சிவகாசி நாம் தமிழர் கட்சி சார்பாக இன்று (02/04/2020) வியாழக்கிழமை காலை 8 மணி அளவில் சிவகாசி பேருந்து நிறுத்தம் காய்கறி சந்தை மற்றும் காரனேசன் காய்கறி சந்தை பகுதிகளில் பொதுமக்களுக்கு முககவசம் வழங்கப்பட்டது.

பி.கு.: இந்நிகழ்வில் 20க்கும் மேற்பட்ட உறவுகள் கலந்துகொண்டனர். முக்கியமாக அனைவரும் பிரிந்து வழங்கியதால் சமூகவிலகல் முறையாக பின்பற்றப்பட்டது. உறவுகள் அனைவரும் முககவசம் அணிந்திருந்தனர்
—————————————————————
நிகழ்வு 3: சிவகாசி ஊராட்சி ஒன்றியம் பள்ளபட்டி ஊராட்சிக்குட்பட்ட மீனாட்சிகாலனி பகுதியில் இன்று (02/04/2020) காலை 7 மணி அளவில் பொதுமக்களுக்கு சிவகாசி நாம் தமிழர் கட்சி சார்பாக கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.

பி.கு.: இந்நிகழ்வில் சமூகவிலகல் முறையாக பின்பற்றப்பட்டது. உறவுகள் அனைவரும் முககவசம் அணிந்திருந்தனர்.

#corona #coronavirus #prevention #NTK #NaamTamilar #NaamTamilarKatchi

Related posts

Leave a Comment