Thangam Thenarasu

கடிதம் எழுதுவதற்கானக் கருப்பொருளைத்
தலைவர் கலைஞர் எங்கே; எப்போது; எப்படிக் கைக்கொள்வார் என்பது ஆச்சரியமானது!.

ஒரு நாள் முன்னிரவில் அவரது சிஐடி காலனி இல்லத்தில் அமர்ந்து வழக்கம் போலப் பேசிக்கொண்டிருந்தார். பேச்சு அரசியலை விடுத்து இலக்கியம், வரலாறு எனப் பயணப்பட்டுக் கொண்டிருந்தது. அதனூடே நான் எதேச்சையாக அப்போது மயிலாடுதுறை அருகே கிடைத்திருந்த “திருவிந்தளூர்ச் செப்பேடுகள்” குறித்து மிகச் சுருக்கமாகச் சொன்னதும், அதைக் காண வேண்டும் என விரும்பினார். அதற்கான உரிய ஏற்பாட்டினைச் செய்வதாகச் சொல்லி விட்டு சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்த பின் விடை பெற்று வீட்டிற்குச் சென்றேன்.

இரவு பதினொன்றரை மணி இருக்கும்.

தொலைபேசி அழைத்தது. அவரே தான்!

“ ஏன்யா, அந்த செப்பேடு பத்திச் சொன்னியே; அதைக் கொஞ்சம் விவரமா சொல்லு!”

மறுநாள் காலை, முரசொலியின் முதல் பக்கத்தில் உடன்பிறப்புக்கான கடிதம் இருந்தது.

“செப்பேடு சொல்லும் செய்தி” !!

அன்றைய அரசியல் சூழ்நிலையைச் செப்பேட்டின் செய்திகளுடன் இணைத்து தனக்கே உரிய வகையில் தன் உடன்பிறப்புகளுக்கு அதில் விவரித்திருந்தார்.

“ வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்!”😊

Related posts

Leave a Comment