Thangam Thenarasu

காலையில் முதல் அழைப்பு!

கழகத் தலைவரிடம் இருந்து!

கவனத்துடன் இருந்து களப்பணியாற்றிட வேண்டும் என்ற அவரது அறிவுரையில் கனிவும், பொது மக்கள் நலனுக்கான கரிசனமும் நிறைந்திருக்கக் கண்டேன்.

இக்கட்டான இச்சூழ்நிலையில் பொதுமக்களுக்கான அத்தியாவசியத் தேவைகள் தடையின்றி நிறைவேற்றப்படுவதை எல்லா வகையிலும் உறுதி செய்ய வேண்டியதின் அவசியத்தை தனது உரையாடலின் ஒவ்வொரு நிமிடத்திலும் வலியுறுத்தினார்.

அவரது அறிவுரைப்படியே ஆங்காங்கே கழகத்தோழர்கள் தம்மால் இயன்றவகையில் எல்லாம் இயங்கி வருவதை எடுத்துச் சொன்னேன்.

நியாயவிலைக்கடைகளில் அத்தியாவசியப் பொருட்களின் இருப்பையும், அவற்றின் தரத்தையும், முறையாக அவை பொதுமக்களுக்கு வழங்கப்பெறுவதையும் ஆய்வுசெய்திட வேண்டும் என்ற அவரது ஆணைக்கிணங்க , இன்று நியாய விலைக்கடைகளில் ஆய்வு மேற்கொண்டேன்.

பொதுமக்களில் பலரும் முகக்கவசம் இன்றியே அங்கே வந்திருப்பது கண்டேன்.
இந்த வகையில் இன்னும் களத்தில் விழிப்புணர்வு அதிகமாகவே தேவைப்படுகிறது.

Related posts

Leave a Comment