*விருதுநகர் மாவட்டம் 05.04.2020*
விருதுநகர் NGO காலனியை சேர்ந்த மகேஸ்வரி என்ற பெண் காய்கறி வாங்கச் சென்றபோது விருதுநகர் பொட்டல் அருகில் ரூபாய் 4000/- ஐ தவறவிட்டுள்ளார். இதுகுறித்து மகேஸ்வரி பொட்டல் அருகில் பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த விருதுநகர் மேற்கு காவல் நிலைய சார்பு ஆய்வாளர் திரு.அன்புதாசன் அவர்கள் மற்றும் முதல்நிலை காவலர்கள் திரு. லெனின் சுந்தர், திரு.முத்து அய்யனார் ஆகியோர், சிசிடிவி காணொளி காட்சி பதிவுகளை ஆய்வு செய்து நடத்திய விசாரணையில், மகேஸ்வரி தொலைத்த பணத்தை சத்திரரெட்டியபட்டியை சேர்ந்த நபர் ஒருவர் எடுத்துச் சென்றது தெரியவந்தது. மேற்படி நபரிடம் பணத்தை பறிமுதல் செய்த காவல்துறையினர், மகேஸ்வரியிடம் பணத்தை ஒப்படைத்தனர்.