DMK MLA MEET VIRUDHUNAGAR IAS COLLECTOR

கழகத் தலைவரின் அறிவுரையின்படி, விருதுநகர் மாவட்ட ஆட்சியரை இன்று கழகச் சட்ட மன்ற உறுப்பினர்கள் அனைவரும் சென்று சந்தித்தோம்.

மாவட்டத்தின் பல பகுதிகளில் நடைபெற்று வரும் கொரொனா தொற்று தடுப்பு நடவடிக்கைகள் பற்றி விவாதித்தோம்.திருச்சுழித் தொகுதியைச் சார்ந்த ஊர்களில் அறியப்பட்ட விவரங்களை மாவட்ட ஆட்சியர் கவனத்திற்கு எடுத்துரைத்தேன். இக்கட்டான இச்சூழலில், மாவட்ட நிர்வாகத்தின் பணி, பாராட்டப்படத் தக்க வகையில் இருப்பதை நன்றியுடன் ஆட்சியரிடம் பகிர்ந்து கொண்டாலும்; குறிப்பாக,

* நியாயவிலைக்கடைகளில் வழங்கப்படும் அரிசியின் தரம் குறைந்துள்ளதையும், முறையான வகையில் சில கிராமங்களில் வழங்காமல் இருப்பதையும்,

* கருவுற்றுள்ள தாய்மார்கள் விஷயத்தில் கூடுதல் அக்கறைக் காட்டப்படவேண்டும் என்பதையும்,

* “ containment zone” என்பதற்குள்ளாக கொண்டுவரப்பட்டுள்ள சில கிராமங்களில் பொது மக்கள் நடை முறை வாழ்க்கையில் சந்தித்து வரும் இன்னல்களைப் போக்க வேண்டும் என்பதையும்,

* அனைத்து ஊராட்சிகளிலும் தூய்மைப்பணியை இன்னும் செம்மையாக செயல் படுத்த வேண்டியதின் அவசியம் நிரம்பி உள்ளதையும்,

* அத்தியாவசியப் பொருட்கள் தாமதமின்றியும், தட்டுப்பாடின்றியும் கிடைக்கவேண்டியதையும்

சுட்டிக்காட்டி, மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தினேன். அவரும் பொறுமையாகக் கேட்டு அவற்றின் மீது தக்க நடவடிக்கைகளை எடுப்பதாக உறுதி அளித்தார். கழக சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரின் ஒத்துழைப்பினை எல்லா வகையிலும் நல்கிட நாங்களும் உறுதி அளித்தோம்.

Related posts

Leave a Comment