Beela Rajesh

சென்னை: தமிழகத்தில் இன்று மேலும் 48 பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது உறுதி செய்யப்பட்டதையடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 738 ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் நிருபர்களை சந்தித்த சுகாதார செயலர் பீலா ராஜேஷ் கூறியதாவது: தமிழகத்தில் இன்று புதிதாக 48 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 4 பேர் சென்னையை சேர்ந்தவர்கள். தமிழகத்தில் இதுவரை வீட்டுக் கண்காணிப்பில் 60,739 பேரும், அரசு கண்காணிப்பில் 230 பேரும் உள்ளனர். சிகிச்சை அளித்த 4 டாக்டர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் இதுவரை 6,095 பேருக்கு ரத்த மாதிரி பரிசோதனைகள் எடுக்கப்பட்டுள்ளன. 5 பேரின் உடல்நிலைமை மோசமாக உள்ளது. மற்றவர்களின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இதுவரை 21 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். இன்று டிஸ்சார்ஜ் ஆனவர்களில் ஒருவர் 82 வயதானவர். பலி எண்ணிக்கை 8 ஆக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Related posts

Leave a Comment