விளம்பரங்களை நிறுத்தச் சொல்வதா? சோனியாவுக்கு ஐ.என்.எஸ்., கண்டனம்

புதுடில்லி : ‘அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு, விளம்பரங்கள் தருவதை, மத்திய அரசு நிறுத்த வேண்டும்’ என கூறிய, காங்கிரஸ் தலைவர், சோனியாவுக்கு, ஐ.என்.எஸ்., எனப்படும், இந்திய செய்திதாள்கள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.

இது பற்றி சங்கத்தின் தலைவர், சைலேஷ் குப்தா வெளியிட்டுள்ள அறிக்கை: கொரோனா வைரஸ் பரவலால் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை தவிர்க்க, அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு, விளம்பரங்கள் தருவதை, மத்திய அரசு நிறுத்த வேண்டும் என, காங்கிரஸ் தலைவர் சோனியா கூறியுள்ளது, கண்டனத்துக்குரியது.

விளம்பரத்துக்காக அரசு செலவழிப்பது, சிறிய தொகை தான். ஆனால், செய்திதாள் நிறுவனங்களுக்கு, அது மிகப் பெரிய வருமானம். செய்திதாள் நிறுவனங்கள், ஏற்கனவே கடும் நெருக்கடியை சந்தித்து வரும் நிலையில், அரசு விளம்பரங்கள் வாயிலாக கிடைக்கும் பணம் தான், அவற்றுக்கு உதவி செய்கின்றன.

அச்சு ஊடகங்களில் மட்டும் தான், சம்பள வாரியம் உள்ளது. ஊழியர்களுக்கு எவ்வளவு சம்பளம் வழங்க வேண்டும் என, அரசு முடிவு செய்கிறது.பொய்ச் செய்திகள் அதிகம் பரவும் இக்காலத்தில், அச்சு ஊடகங்கள் தான், நாட்டின் மூலை முடுக்குகளில் வசிக்கும் மக்களிடமிருந்து நேரடியாக தகவல்களை பெற்று, அரசு மற்றும் எதிர்க்கட்சிகளுக்கான செய்திகளை வெளியிடுகின்றன.

‘டிஜிட்டல் மீடியா’ வால், பத்திரிகைளுக்கு, விளம்பரங்களும், விற்பனையும் குறைந்து வருகின்றன. அதோடு, இப்போது, நாடு முழுவதும் அமல்படுத்தப் பட்டுள்ள ஊரடங்கால், நாங்கள் கடும் நிதி நெருக்கடியை சந்தித்து வருகிறோம்.

இப்படிப்பட்ட நிலையில், இரண்டு ஆண்டுகளுக்கு, விளம்பரங்கள் தருவதை மத்திய அரசு நிறுத்த வேண்டும் என, காங்., தலைவர் சோனியா கூறியிருப்பது, மிகவும் வருத்தம் அளிக்கிறது. இதனால், அரசுக்கு தெரிவித்த இந்த யோசனையை, வாபஸ் பெற வேண்டும் என, சோனியாவை, ஐ.என்.எஸ்., கேட்டுக் கொள்கிறது. இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.


எதிர்ப்பு

அகில இந்திய தனியார் ரேடியோ நிறுவனங்களின் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இந்தியாவைப் பொறுத்தவரை,

யும், ரேடியோ நிறுவனங்கள் வழங்கி வருகின்றன. இதுமட்டுமின்றி, அரசின் திட்டங்கள், நிகழ்ச்சிகள், செயல்பாடுகள் மற்றும் உள்ளூர் தகவல்களையும் வழங்கி வருகின்றன.

கடந்த சில ஆண்டுகளாகவே, ரேடியோ நிறுவனங்கள், பெரும் சரிவை சந்தித்து வருகின்றன. கடந்த இரண்டு ஆண்டுகளில், 20 சதவீதத்திற்கும் மேலாக, விளம்பர வருமானம் குறைந்துள்ளது. இந்நிலையில், அரசு விளம்பரத்தையும் நிறுத்தினால், ரேடியோ நிறுவனங்களுக்கு பாதிப்பு ஏற்படும்.இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

Leave a Comment