Virudhunagar District Police

விருதுநகர் ஊரக காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் காணாமல் போன முரளிகிருஷ்ணன் என்பவரது Tavera வாகனத்தை கண்டுபிடிப்பதற்காக, விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.P.பெருமாள் IPS அவர்கள் அறிவுரையின்படி, விருதுநகர் உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் திரு.T.R.சிவபிரசாத் IPS அவர்கள்
தலைமையில்,
காவல் சார்பு ஆய்வாளர் திரு. அன்புதாசன்,தலைமை காவலர் திரு.அழகுமுருகன் முதல்நிலை காவலர்கள் திரு.பிரபு, Tr.சிவகுமார்,திரு. முத்துஅய்யனார்,திரு.பாண்டியராஜன் ஆகியோர் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொண்டனர்.மேலும் சம்பவ நடந்த இடத்திலிருந்து சிசிடிவி காணொளி காட்சிகளை ஆய்வு செய்து நடத்திய விசாரணையில், நாகர்கோவிலை சேர்ந்த ஆஸ்டின் ஈபன் இன்பராஜ் மற்றும் சுரேஷ்குமார் ஆகிய இருவர் Tavera வாகனத்தை திருடியது தெரியவந்தது. மேற்படி நபர்களிடம் நடத்திய விசாரணையில், வாகனத்தை மதுரையை சேர்ந்த ராஜேந்திரன் என்பவரிடம் விற்பனை செய்தது தெரியவந்ததையடுத்து, ஆஸ்டின் ஈபன் இன்பராஜ்,சுரேஷ் குமார்,ராஜேந்திரன் ஆகிய மூவரை தனிப்படை காவல்துறையினர் கைது செய்ததோடு, Tavera வாகனத்தை குற்றவாளிகளிடமிருந்து பறிமுதல் செய்தனர். மேலும் இவ்வழக்கில் சிறப்பாக செய்யப்பட்ட விருதுநகர் தனிப்படை காவல்துறையினர் மற்றும் விருதுநகர் ஊரக காவல் ஆய்வாளர் திரு.ராமகிருஷ்ணன் அவர்களையும், விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.P.பெருமாள் IPS அவர்கள் வெகுவாக பாராட்டினார்கள்.

#Virudhunagar#szsocialmedia1
#TNPolice#TruthAlloneTriumphs

Related posts

Leave a Comment