தமிழகத்தில் 8 டாக்டர்களுக்கு கொரோனா

சென்னை: தமிழகத்தில் 8 டாக்டர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்தார். தமிழகத்தில் இன்று மேலும் 58 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 969 ஆக அதிகரித்துள்ளது. ஈரோட்டில், கொரோனா பாதித்தவர் உயிரிழந்ததால், பலி எண்ணிக்கையும் 10 ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில், சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் கூறுகையில், ‘தமிழகத்தில் 8 டாக்டர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 4 பேர் அரசு மற்றும் 4 பேர் தனியார் டாக்டர்கள்’ என்றார்.

Read More

Manickam Tagore .B

கொரோனா வைரஸ்- ஊரடங்கு உத்தரவால் வேலை இழந்துள்ள தீப்பெட்டி, பட்டாசு தொழிலாளர்களுக்கு ரூபாய் 7,500/ ஊதியம் வழங்க வேண்டும்.மாண்புமிகு பாரத பிரதமர் அவர்களுக்கும் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சருக்கும் விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மக்கள் செல்வர் திரு.ப. மாணிக்கம் தாகூர் அவர்கள் கடிதம்.#

Read More

Thangam Thenarasu

நேற்றும்- இன்றும், திருச்சுழித் தொகுதியில் அமைந்துள்ள முடுக்கன்குளம், அ.முக்குளம் மற்றும் முஷ்டக்குறிச்சி அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், காரியாபட்டி பேரூராட்சிப்பகுதிகளிலும் கொரொனா நோய்த் தொற்று நடவடிக்கைகளைப் பார்வையிட்டு நிலமைகளை ஆய்வு செய்ததுடன், கிராமப் பகுதிகளில் நிலவும் பிரச்சனைகளை மாவட்ட ஆட்சியரின் கவனத்திற்கும் எடுத்துச் சென்று தீர்வு வேண்டினோம். ஆட்சியரும் அவற்றைக் கவனத்தில் கொண்டிருக்கிறார் என்பதை அவருடனான உரையாடலில் உணர்ந்தேன். 😊🙏

Read More

Kkssr Ramachandran

கழக தலைவர் தளபதி அவர்களின் ஆலோசனைப்படி இன்று 11/04/2020 இரண்டாம் கட்டமாக அருப்புக்கோட்டை நகரில் 7 வார்டுகளில் கப சுர குடிநீர் வழங்கும் முகாம்களை துவக்கிவைத்தேன்

Read More

ஏழை, எளியோர்களுக்கு நலத்திட்ட உதவிகள்

கழக தலைவர் திரு.தளபதியார் அவர்களின் ஆனைக்கிணங்க விருதுநகர் வடக்கு மாவட்ட கழக செயலாளர் திரு.தங்கம்தென்னரசு MLA அவர்கள் விருதுநகர் வடக்கு மாவட்டம், சிவகாசி தெற்கு ஒன்றியம் அனுப்பன்குளம் கிராமத்தில் ஏழை, எளியோர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். சாத்தூர் சட்டமன்றத் தொகுதி கோசு குண்டு S V சீனிவாசன் அவர்கள்

Read More

ஏழை, எளியோர்களுக்கு நலத்திட்ட உதவிகள்

கழக தலைவர் திரு.தளபதியார் அவர்களின் ஆனைக்கிணங்க விருதுநகர் வடக்கு மாவட்ட கழக செயலாளர் திரு.தங்கம்தென்னரசு MLA அவர்கள் விருதுநகர் வடக்கு மாவட்டம், சிவகாசி தெற்கு ஒன்றியம் அனுப்பன்குளம் கிராமத்தில் ஏழை, எளியோர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். சாத்தூர் சட்டமன்றத் தொகுதி கோசு குண்டு S V சீனிவாசன் அவர்கள் …

Read More

நிவாரண நிதி அளித்த சிறுவனுக்கு நன்றி தெரிவித்த முதல்வர்

சென்னை : முதல்வர் பொது நிவாரண நிதிக்கு, தன் சேமிப்பு தொகையை வழங்கிய சிறுவனுக்கு, முதல்வர், இ.பி.எஸ்., நன்றி தெரிவித்துள்ளார். கொரோனா நோய் தடுப்பு பணிக்காக, முதல்வர் நிவாரண நிதிக்கு, ஏராளமானோர் தங்களால் முடிந்த உதவிகளை அளித்து வருகின்றனர்.திருப்பூரை சேர்ந்த, நான்காம் வகுப்பு மாணவன் விஷாக், தன் சேமிப்பு பணம், 1,150 ரூபாயை, முதல்வர் நிவாரண நிதிக்கு வழங்க முன் வந்தான். சிறுவனின் தந்தை பிரசாத், தன் வங்கி கணக்கில் இருந்து, பணத்தை அனுப்பியதுடன், தன் மகன் எழுதிய கடிதத்தையும், முதல்வரின், ‘டுவிட்டர்’ பக்கத்தில், பதிவு செய்தார். அதற்கு, முதல்வர் நன்றி தெரிவித்துள்ளார். அவர் தன், டுவிட்டர் பக்கத்தில், ‘சிறு வயதிலேயே சேமிக்கும் பழக்கமும், நாட்டிற்கு உதவும் எண்ணமும் உடைய சிறுவன் விஷாக்கிற்கு, என் அன்பார்ந்த நன்றியை தெரிவிக்கவும்’ என, குறிப்பிட்டுள்ளார்.

Read More

tamilnadu-lockdown-will-be-extended-for-14-days-cm-calls-cabinet-meet/

லாக்டவுன்.. இன்று அமைச்சரவையை கூட்டுகிறார் எடப்பாடி பழனிச்சாமி.. அதிரடி அறிவிப்புகளுக்கு வாய்ப்பு சென்னை: தமிழகத்தில் லாக்டவுன் (Lock down) நீட்டிப்பு அவசியம் என்று மருத்துவர் குழு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆலோசனை வழங்கி உள்ளது. இது தொடர்பாக இன்று மாலை அமைச்சரவையை கூட்ட முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி முடிவெடுத்துள்ளார். முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் மருத்துவக் குழுவுடன் நேற்று தலைமைச் செயலகத்தில் ஆலோசனை நடைபெற்றது. பின்னர், டாக்டர்கள் குழுவை சேர்ந்த டாக்டர் பிரதீபா நிருபர்களிடம் அளித்த பேட்டியில் கூறியதாவது: தமிழகத்தில் பொது சுகாதாரம் மிக சிறப்பாக இருக்கிறது. அதை இன்னமும் பலப்படுத்த வேண்டும் என்பது பற்றி பேசினோம். மருத்துவமனைகளில் கூடுதல் படுக்கை அறை ஒதுக்கப்பட்டு உள்ளது, அதை பற்றியும் ஆலோசித்தோம். நோயாளிகளுக்கு, எந்த மாதிரி தேவை உள்ளது, அவர்கள் குடும்பத்தினருக்கு எந்த மாதிரி தேவை உள்ளது என்பது…

Read More