தமிழகத்தில் 8 டாக்டர்களுக்கு கொரோனா

சென்னை: தமிழகத்தில் 8 டாக்டர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்தார்.

தமிழகத்தில் இன்று மேலும் 58 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 969 ஆக அதிகரித்துள்ளது. ஈரோட்டில், கொரோனா பாதித்தவர் உயிரிழந்ததால், பலி எண்ணிக்கையும் 10 ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில், சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் கூறுகையில், ‘தமிழகத்தில் 8 டாக்டர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 4 பேர் அரசு மற்றும் 4 பேர் தனியார் டாக்டர்கள்’ என்றார்.

Related posts

Leave a Comment