நிவாரண நிதி அளித்த சிறுவனுக்கு நன்றி தெரிவித்த முதல்வர்

சென்னை : முதல்வர் பொது நிவாரண நிதிக்கு, தன் சேமிப்பு தொகையை வழங்கிய சிறுவனுக்கு, முதல்வர், இ.பி.எஸ்., நன்றி தெரிவித்துள்ளார்.

கொரோனா நோய் தடுப்பு பணிக்காக, முதல்வர் நிவாரண நிதிக்கு, ஏராளமானோர் தங்களால் முடிந்த உதவிகளை அளித்து வருகின்றனர்.திருப்பூரை சேர்ந்த, நான்காம் வகுப்பு மாணவன் விஷாக், தன் சேமிப்பு பணம், 1,150 ரூபாயை, முதல்வர் நிவாரண நிதிக்கு வழங்க முன் வந்தான்.

சிறுவனின் தந்தை பிரசாத், தன் வங்கி கணக்கில் இருந்து, பணத்தை அனுப்பியதுடன், தன் மகன் எழுதிய கடிதத்தையும், முதல்வரின், ‘டுவிட்டர்’ பக்கத்தில், பதிவு செய்தார். அதற்கு, முதல்வர் நன்றி தெரிவித்துள்ளார்.

அவர் தன், டுவிட்டர் பக்கத்தில், ‘சிறு வயதிலேயே சேமிக்கும் பழக்கமும், நாட்டிற்கு உதவும் எண்ணமும் உடைய சிறுவன் விஷாக்கிற்கு, என் அன்பார்ந்த நன்றியை தெரிவிக்கவும்’ என, குறிப்பிட்டுள்ளார்.

Related posts

Leave a Comment