தமிழகத்தில் மேலும் 106 பேருக்கு கொரோனா.. பாதிப்பு எண்ணிக்கை 1000-ஐ தாண்டியது

சென்னை: தமிழகத்தில் மேலும் 106 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது என தமிழக சுகாதாரத் துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.

கொரோனா பாதிப்பு தமிழக மாவட்டங்கள் 3 வண்ணங்களாக பிரிப்பு தமிழகத்தில் நேற்று வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 969ஆக இருந்தது. இந்த நிலையில் பலி எண்ணிக்கை 10ஆக இருந்தது. இன்றைய தினம் கொரோனா நிலவரம் குறித்து கூறுவதற்காக செய்தியாளர்களை தமிழக சுகாதாரத் துறை செயலாளர் பீலா ராஜேஷ் செய்தியாளர்களை சந்தித்தார்.

106 பேருக்கு கொரோனா அப்போது அவர் கூறுகையில் தமிழகத்தில் வீட்டுக் கண்காணிப்பில் இருப்போரின் எண்ணிக்கை 39,041. அரசு கண்காணிப்பில் இருப்போரின் எண்ணிக்கை 162. 28 நாட்கள் முடித்தோரின் எண்ணிக்கை 58,189 ஆகும். நேற்று தமிழகத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 969 ஆக இருந்தது. இந்த நிலையில் தமிழகத்தில் இன்று 106 பேருக்கு கொரோனா பாதித்துள்ளது.

மருத்துவர்கள் 8 பேர் இதன் மூலம் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1075 ஆக உயர்ந்துள்ளது. இன்று ஒருவர் உயிரிழந்துள்ளதால் பலி எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது. 106 பேரில் 16 பேருக்கு டிராவல் ஹிஸ்டரி உள்ளது. இதுவரை சேம்பிள்கள் எடுக்கப்பட்டோரின் எண்ணிக்கை 10,655 ஆக உள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மருத்துவர்கள் மொத்தம் 8 பேர் உள்ளனர்.

2 பேர் தனியார் மருத்துவர்கள் அவர்களில் 2 பேர் தனியார் மருத்துவர்கள், 2 பேர் அரசு மருத்துவர்கள், 4 பேர் ரயில்வே மருத்துவர்கள். தமிழகத்தில் 23 இடங்களில் கொரோனா பரிசோதனை ஆய்வகங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அரசு மருத்துவமனையில் 14 ஆய்வகங்களும் 9 தனியார் ஆய்வகங்களும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அரசு சார்பில் அமைக்கப்பட்ட ஆய்வகங்களின் பட்டியல் பின்வருமாறு:

அரசு ஆய்வகங்கள் கிங்ஸ் இன்ஸ்டியூட், கிண்டி, மெட்ராஸ் மெடிக்கல் கல்லூரி மருத்துவமனை தேனி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, நெல்லை அரசு மருத்துவமனை திருவாரூர் அரசு மருத்துவமனை சேலம் அரசு மருத்துவமனை கோவை அரசு மருத்துவமனை விழுப்புரம் அரசு மருத்துவமனை மதுரை அரசு மருத்துவமனை திருச்சி அரசு மருத்துவமனை பெருந்துறை அரசு மருத்துவமனை சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனை தருமபுரி அரசு மருத்துவமனை ஈஎஸ்ஐ அரசு மருத்துவமனை

கொரோனா தனியார் ஆய்வகங்கள் சிஎம்சி மருத்துவமனை, வேலூர் அப்பல்லோ மருத்துவமனை, சென்னை நியூபெர்க் எக்லிச் லேப் பிரைவேட் லிமிடெட், மாசிலாமணி சாலை, சென்னை ஸ்ரீ ராமசந்திரா மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், போரூர், சென்னை மைக்ரோபயாலஜி, வீரகேரளம் சாலை, கோவை ஒய்ஆர்ஜி கேர், தரமணி, சென்னை ஹைடெக் டயக்னாஸ்டிக் சென்டர், பூந்தமல்லி ஹைரோடு மியாட் மருத்துவமனை மெட்ராஸ் மெடிக்கல் மிஷன் (MMM), முகப்பேர் கிழக்கு, சென்னை

செலவை அரசே ஏற்கும் தனியார் மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை மேற்கொள்வதற்கான செலவை அரசே ஏற்கும் என தெரிவித்துள்ளார். இது வரை 50 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாகவும், ரேபிட் டெஸ்ட் கிட்டுகளை விட பிசிஆர் சோதனையே நோயின் தன்மையை வெளிப்படுத்தும் என பீலா தெரிவித்தார்.

Related posts

Leave a Comment