கொரோனா தடுப்பு நடவடிக்கை.. அதிரடி காட்டும் திமுக.. ஏப்ரல் 15ம் தேதி அனைத்து கட்சி கூட்டம்!

சென்னை: ஏப்ரல் 15ம் தேதியில் திமுக சார்பில் அனைத்து கட்சி கூட்டம் நடத்தப்பட உள்ளது. கொரோனா குறித்து ஆலோசிக்க திமுக சார்பாக அனைத்து கட்சி கூட்டம் நடத்தப்பட உள்ளது.

கொரோனாவிற்கு எதிரான தடுப்பு பணிகளை மேற்கொள்ள தமிழகம் முழுக்க திமுக எம்பிக்கள், எம்எல்ஏக்கள், மாவட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் தீவிரமாக களமிறங்கி பணியாற்றி வருகிறார்கள். திமுக தலைவர் ஸ்டாலின் இது தொடர்பாக மாவட்டம் முழுக்க நிர்வாகிகளுக்கு வீடியோ கால் மூலம் அறிவுரைகளை வழங்கி வருகிறார்.

தமிழகம் முழுக்க மக்களுக்கு போதுமான உதவிகளை செய்ய வேண்டும். மக்களை கூட்டமாக கூட விடாமல் உதவிய செய்ய வேண்டும் ஸ்டாலின் கட்சியினருக்கு உத்தரவிட்டுள்ளார். இந்த நிலையில் தமிழகத்தில் அரசியல் கட்சிகள் மற்றும் என்ஜிஓ அமைப்புகள் மக்களுக்கு உதவி செய்ய கூடாது என்று அரசு கட்டுப்பாடு விதித்துள்ளது. மக்கள் தனிமனித விலகலை கடைப்பிடிக்க வேண்டும். அதனால் அரசியல் கட்சிகள் மக்களுக்கு உதவி செய்ய கூடாது என்று அரசு கூறியுள்ளது. இதற்கு திமுக கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக கருத்து தெரிவித்த திமுக தலைவர் ஸ்டாலின், காலத்தில் துயருறும் எளியவர்களின் பசி நீக்க, தமிழ் மக்களின் கரங்கள் நீளும்போது, அதைத் தடுக்க உத்தரவிட எவராலும் இயலாது; தானும் செய்யாது அடுத்தவர்களையும் தடுப்பது வஞ்சகம்!

இது ஜனநாயக நாடு; உதவி செய்யக் கூடாது என்பது சர்வாதிகாரத்தனம். கருணையில்லா ஆட்சி கடிந்தொழிக!, என்று குறிப்பிட்டு இருந்தார். இந்த நிலையில்தான் தற்போது ஏப்ரல் 15ம் தேதியில் திமுக சார்பில் அனைத்து கட்சி கூட்டம் நடத்தப்பட உள்ளது. தமிழக அரசு கொரோனாவிற்கு எதிராக எடுத்துள்ள நடவடிக்கை குறித்து ஆலோசிக்க திமுக சார்பாக அனைத்து கட்சி கூட்டம் நடத்தப்பட உள்ளது.

Related posts

Leave a Comment