Virudhunagar District Police

சாத்தூர் நகராட்சி –
காவலர்களின் அறப்பணி –
கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை மற்றும் சுகாதார பணியில் ஈடுபட்டுள்ள சாத்தூர் நகராட்சி 110 தூய்மைப் பணியாளர்களின் சேவையை கௌரவிக்கும் பொருட்டு, சாத்தூர் நகர காவல் ஆய்வாளர் திரு. சுபக்குமார் அவர்கள் தனது சொந்த செலவில் தூய்மை பணியாளர்களுக்கு உணவு (கிடாய் விருந்து) வழங்கினார்கள். இந்நிகழ்ச்சியில் காவல் மதுரை சரக காவல்துறை துணைத் தலைவர் திருமதி. ஆனிவிஜயா IPS., விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.P. பெருமாள் IPS., சாத்தூர் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் திரு. ராமகிருஷ்ணன், ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் கலந்து கொண்டு தூய்மை பணியாளர்களுக்கு உணவு (கிடாய் விருந்து) பரிமாறினார்கள். இந்நிகழ்ச்சியின் நிறைவில் தன்னலமற்ற சேவை புரிந்து வரும் சாத்தூர் நகர காவலர்கள் அனைவருக்கும், ஆய்வாளர் அவர்களுக்கும், நெஞ்சார்ந்த நன்றியினை தூய்மைப் பணியாளர்கள் தெரிவித்தனர்.
#virudhunagar #szsocialmedia1 #TNPolice #TruthAloneTriumphs

Related posts

Leave a Comment