10ம் வகுப்புக்கு மே இறுதியில் பொதுத்தேர்வு?

சென்னை: ‘ஊரடங்கு, வரும், 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதால், மே மாத இறுதியில், 10ம் வகுப்புக்கு பொதுத்தேர்வு நடத்தப்படும்’ என, பள்ளி கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

தமிழகத்தில், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு, மார்ச், 27ல் நடப்பதாக இருந்தது. இந்த தேர்வு, ஊரடங்கு உத்தரவால், தள்ளி வைக்கப்பட்டது. கொரோனா வைரஸ் பிரச்னையால், தற்போதுள்ள ஊரடங்கு, வரும், 30 வரை நீட்டிக்கப்படும் என, தமிழக முதல்வர், இ.பி.எஸ்., அறிவித்துள்ளார்.

ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளதால், மே மாத இறுதியில் பொதுத்தேர்வு நடத்த வாய்ப்புள்ளதாக, பள்ளி கல்வி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Related posts

Leave a Comment