ப்ரீத்தி சுதன் முதல் ஷைலஜா வரை.. கொரோனாவை ஒழிக்க உழைக்கும் 6 பெண் போராளிகள்.. யார் இவர்கள்?

டெல்லி: இந்தியாவில் கொரோனா வைரஸை ஒழிக்கும் போராட்டத்தில் ஓய்வில்லாமல் 6 பெண் போராளிகள் உழைத்து வருகிறார்கள். யார் அவர்கள்? இதில் சிறப்பம்சம் என்னவெனில் 6 பேரில் தமிழக பெண்ணும் உள்ளார்.

உலகம் முழுவதும் கொரோனாவை ஒழிக்க ஓய்வில்லாமல் சுகாதாரப் பணியாளர்களும் மருந்தை கண்டுபிடிக்க ஆராய்ச்சியாளர்களும் சட்டம் ஒழுங்கை சரி செய்ய போலீஸாரும், நிர்வாகக் காரணங்களுக்காக மாவட்ட நிர்வாகமும், தூய்மை பணிகளுக்காக தூய்மை பணியாளர்களும் பணியாற்றி வருகிறார்கள்.

இந்த நிலையில் கொரோனாவை மொத்தமாக விரட்ட டாக்டர்கள், ஐஏஎஸ் அதிகாரிகள், விஞ்ஞானிகள் என இந்தியாவை சேர்ந்த 6 பெண்கள் சிங்கம் போல் சோர்வின்றி பணியாற்றி வருகிறார்கள். அவர்களில் தமிழக பெண்ணும் உள்ளார். அவர்கள் யார் என்பதை பார்ப்போம். முதலில் அவர்களது அயராத உழைப்பிற்கு சல்யூட்.

போராளி 1

முதலில் ப்ரீத்தி சுதனை பற்றி பார்ப்போம். இவர் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறையின் செயலாளராக இருந்து வருகிறார். நோயை கட்டுப்படுத்த பிரதமர் நரேந்திர மோடி அரசின் கொள்கைகள் செயல்படுத்தும் குழுவில் இவர் முக்கிய நபராவார். இவர் 1983-ஆம் ஆண்டு ஆந்திர பிரதேச பிரிவில் ஐஏஎஸ் அதிகாரியாவார். இவர் பொருளாதாரத்தில் எம். பில் படித்துள்ளார். இவர் வாஷிங்டன்னில் உள்ள உலக வங்கியிலும் பணியாற்றிய அனுபவம் உள்ளது. இவர் செயலாளராக உள்ள அமைச்சகம்தான் இந்தியாவில் கொரோனாவுக்கு எதிரான சவால்களை எதிர்க் கொள்ளும் முக்கிய அமைச்சகமாகும். இவர் மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தனுடன் பணியாற்றி வருகிறார். அது போல் மத்திய- மாநில அரசுகளுக்கு இடையே துறை ரீதியில் பாலமாக இருந்து வருகிறார். வழக்கமாக கொரோனா குறித்த அப்டேட்டுகள் குறித்து தினந்தோறும் மாநில அரசுகளின் பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். அது போல் பிரதமர் அலுவலகமோ மத்திய அமைச்சகமோ கொரோனா குறித்த தகவல்களை பெற வேண்டுமானால் முதலில் நாடுவது இவரைத்தான். எனவே இவர் மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் கொரோனா குறித்த அனைத்து தகவல்களையும் எப்போது கேட்டாலும் அளிக்கும் அளவுக்கு தயார் நிலையில் இருப்பார். வுகான் மாகாணத்திலிருந்து 645 இந்திய மாணவர்களை மீட்டு தாயகம் கொண்டு வந்து சேர்த்ததில் பெரும் பங்காற்றியுள்ளார்.

போராளி 2

அடுத்ததாக நாம் பார்க்கவிருப்பது நிவேதிதா குப்தாவை. இவர் சுகாதாரத் துறையில் ஆராய்ச்சி பிரிவில் தொற்றுநோய் துறையின் தலைவராக உள்ளார். இந்தியாவில் கொரோனாவுக்கான சோதனை மற்றும் சிகிச்சை முறைகளை வகுப்பதுதான் இவரது முக்கிய பொறுப்பாகும். கேரளாவில் கடந்த ஆண்டு நிபா வைரஸால் பாதிக்கப்பட்டபோது நோயை கட்டுப்படுத்தியதில் முக்கிய பங்காற்றினார். இவர் லேடி ஹார்டிஞ்ச் மருத்துவ கல்லூரியில் எம்பிபிஎஸ் படித்துள்ளார். நாடு முழுவதும் கோவிட் 19 கண்டறியும் திறன்களை அதிகரிப்பதில் டாக்டர் குப்தா முக்கிய நபராவார். இவர் வெறும் 2 மாதங்களில் 130 -க்கும் மேற்பட்ட அரசு பரிசோதனைக் கூடங்களையும் 52 தனியார் பரிசோதனைக் கூடங்களை கொரோனா பரிசோதனை செய்ய அனுமதி அளித்தார். கடந்த ஆண்டு கேரளாவில் இரவு பகல் பாராமல் ஞாயிற்றுக்கிழமைகளிலும் பணியாற்றி வந்தார். இத்தனைக்கு அந்த வைரஸ் கொரோனாவை போல் தொற்று நோய் அல்ல. இவர் மூலக்கூறு மருத்துவத்தில் பிஎச்டி முடித்துள்ளார். 2009-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட வைரஸ் ஆராய்ச்சி மற்றும் நோயறிதல் ஆய்வகம் நெட்வொர்க் தேசத்தின் முதுகெலும்பாக கருதப்படுகிறது. இதன் மூலம் நாட்டின் எல்லா பகுதிகளிலும் வைரஸைக் கண்டறியும் திறன் உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர் டெங்கு,

சிக்குன்குன்யா, ஜப்பான் என்செபாலிட்டீஸ், இன்ப்ளூயன்சா, ருபெல்லா, மீசல்ஸ் ஆகிய வைரஸ் நோய்கள் குறித்து தீவிரமாக ஆராய்ச்சிகளை மேற்கொண்டிருந்தார்.

போராளி 3

அடுத்து நாம் பார்ப்பது ரேணு ஸ்வரூப். இவர் மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் உள்ள பயோ தொழில்நுட்பத்துறையில் 30 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். இவர் அவுட்ஸ்டான்டிங் சையின்டிஸ்ட் என்பதை குறிக்கும் “எச்” பிரிவை வைத்துள்ளார். அந்த துறையின் செயலாளராக அனுமதிக்கப்பட்ட ஏப்ரல் 2018 வரை வைத்திருந்தார். இவர் கொரோனா வைரஸுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியில் முக்கிய பங்கு வகித்து வருகிறார். கோவிட் 19 நோய்க்கான குறைந்த விலையிலான சோதனை கருவிகள் , வென்டிலேட்டர்களை உருவாக்கும் ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் திறன்களை அதிகரித்து வருவதில் மும்முரமாக செயல்படுகிறார். இவர் ஜெனிட்டிக்ஸ் மற்றும் பிளாண்ட் பிரீடிங்கில் பிஎச்டி படித்துள்ளார். அறிவியல் துறையில் பெண்களை வளர்ச்சியை மேம்படுத்தியதில் ஸ்வரூப் பெயர் பெற்றவர். அறிவியலில் பெண்கள் டாஸ்க் போர்சின் உறுப்பினராகவும் இருந்துள்ளார். இந்த குழுதான் பிரதமருக்கு விஞ்ஞான ரீதியிலான ஆலோசனைகளை வழங்கும்.

போராளி 4

தற்போது 4 ஆவது சிங்க பெண்ணான பிரியா ஆப்ரகாம், இவர்தான் தற்போது நாட்டின் முதுகெலும்பாக கருதப்படுகிறார். அதாவது இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் கீழ் இயங்கும் புனேவின் தேசிய வைரஸாலஜி நிறுவனத்தின் தலைவராவார். ஆரம்பத்தில் கோவிட் 19-க்கான ஒரே சோதனை மையமாக செயல்பட்டது இந்த மையம்தான். நாளுக்கு நாள் கோவிட் 19 நோயாளிகள் அதிகரித்த போது கோவிட் 19 நோயாளிகளின் ரத்த மாதிரிகளை சோதனை செய்யும் நேரத்தை 12 முதல் 14 மணி நேரமாக குறைத்து இந்த மையம் சாதனை படைத்துள்ளது. இந்தியாவில் 3 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பதை புனே பரிசோதனை நிறுவனம்தான் முதலில் உறுதி செய்தது. ஆரம்பத்தில் இந்த மையம்தான் ரத்த மாதிரி சோதனை நடவடிக்கைகளை அதிகரித்தது. ஆனால் பின்னர் கொரோனா வைரஸ் பரிசோதனை கூடங்களை இந்திய மருத்து ஆராய்ச்சி கவுன்சில் அதிகரித்தது. பிரியா ஆப்ரகாமின் தலைமையின் கீழ் புதிதாக தொடங்கப்பட்ட கோவிட் 19 பரிசோதனை கூடங்களில் ஏற்படும் பிரச்சினைகள் களையப்படுகின்றன. புனே மையத்தில் செய்யப்பட்ட சாதனைகள், கொரோனா பாதிப்பு இருப்போரை

கண்டறிதலில் இந்த நிறுவனத்திற்கு பெரும் பங்கு உண்டு என்றால் அது கடின உழைப்பு, குழுவினரின் ஒத்துழைப்பு இல்லாமல் நடந்துவிடாது. இவர் வேலூர் மாவட்டம் சிஎம்சி மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் மற்றும் மருத்துவ மைக்ரோபயாலஜியின் முதுகலைப் பட்டமும் பெற்றார். பின்னர் அதே கல்லூயில் பிஎச்டியும் படித்தார். அவர் சிஎம்சியில் உள்ள வைரஸ் தொற்று துறையின் தலைவராக இருந்தார். கடந்த 2012-ஆம் ஆண்டு எச்ஐவி, ஹெப்டைட்டீஸ் 2014-ஆம் ஆண்டு ஹெப்படைட்டீஸ் பி ஆகியவற்றை கட்டுப்படுத்த உலக சுகாதார மையத்தின் நெறிமுறைகளை பின்பற்றினார். தேசிய ஹெப்படைட்டீஸ் சோதனைக்கு நெறிமுறைகளை வகுக்க மியான்மரில் WHO ஆலோசகராக இருந்தார்.

போராளி 5

கேரள சுகாதாரத் துறையின் அமைச்சராக இருப்பவர் கே கே சைலஜா. இவர் பினராயி விஜயன் அமைச்சரவையில் உள்ள இரு பெண் அமைச்சர்களில் ஒருவராவார். இவர் தலைமையில் அடங்கிய குழுவினர் கொரோனா வைரஸுக்கு எதிராக தீவிரமாக போராடி வருகிறார்கள். உழைப்புகேற்ற பலனையும் பெற்றார்கள். ஆம், இந்தியாவில் கொரோனா இல்லாத மாநிலமாக கேரளா விரைவில் மாறவுள்ளது. இந்தியாவில் அதிகமாக பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையில் இரண்டாவது இடத்தில் இருந்த கேரளா கிடுகிடுவென கீழே இறங்கியது. பலி எண்ணிக்கையிலும் கேரளா, 2 என்ற குறைந்த எண்ணிக்கையிலேயே உள்ளது. 325 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது இன்னும் 190- 197 பேர் வரை மட்டுமே மருத்துவமனையில் உள்ளார்கள். இவர்களும் குணமடைந்துவிட்டால் இந்த மாநிலத்தில் கொரோனா பாதிப்பே இல்லாமல் போய்விடும். இதற்கெல்லாம் காரணம் சைலஜாவும் அவரது குழுவினரும்தான். இத்தனைக்கு இந்தியாவில் முதன்முதலில் கொரோனா பாதித்த மாநிலம் கேரளம்தான். ஆனால் தீவிர கான்டாக்ட் டிரேசிங், சமூக விலகலை கடைப்பிடித்தல், உலக சுகாதார நிறுவனத்தின் வழிமுறைகளை பின்பற்றுதல், அனைத்து எல்லைகளையும் முன்கூட்டியே மூடியது ஆகியவற்றால்தான். மேலும் ரேபிட் டெஸ்ட் கருவிகளை இந்தியாவுக்கு வரவழைத்து அதன் மூலம் விரைவு

சோதனையையும் இந்த மாநிலம் செவ்வனே செய்து காட்டியது.

போராளி 6

அடுத்தபடியாக கடைசியாக தமிழகத்தைச் சேர்ந்த பீலா ராஜேஷ் குறித்து பார்ப்போம். 1997-ஆம் ஆண்டு ஐஏஎஸ் முடித்த இவர் தமிழக சுகாதாரத் துறையின் செயலாளராக உள்ளார். இவர் ஊடகங்களுடன் சுமுகமான நட்பை கொண்டிருக்கிறார். ட்விட்டரிலும் ஆக்ட்டிவ்வாக இருக்கிறார். “வைரஸ் யாரை வேண்டுமானாலும் தாக்கலாம். எனவே பாதுகாப்போடும் விழிப்புணர்வோடும் இருங்கள் என ட்விட்டரில் அண்மையில் இவர் அறிவுறுத்தியிருந்தார். இவர் சென்னை மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் படித்துள்ளார். 2003-ம் ஆண்டு பீகார் மாநிலத்திலிருந்து புதிதாக உதயமான ஜார்க்கண்ட் மாநிலத்துக்கு பீலா மாற்றப்பட்டார். பின்னர் மத்திய அரசின் பணிக்குச் சென்றவர், இந்திய ஹோமியோபதி மருத்துவம், மத்திய ஜவுளித்துறைகளில் பணியாற்றினார். தமிழ்நாட்டில் செங்கல்பட்டு துணை ஆட்சியர், நகர் ஊரமைப்பு இயக்ககத்தின் இயக்குநர், மீன்வளத்துறை

இயக்குநர் எனப் பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார். கடந்த ஜூன் 2019-ஆம் ஆண்டு தமிழக சுகாதார சீர்திருத்த திட்டத்தை உருவாக்க மத்திய மாநில அரசுடன் இணைந்து உலக வங்கியில் 28.7 கோடி டாலர் கடன் பெறும் ஒப்பந்தம் பீலா முன்னிலையில் கையெழுத்தானது. இவர் சுகாதாரத் துறையின் தரத்தை மேம்படுத்த போராடுகிறார். கோவிட் 19 குறித்த அன்றாட நிலவரங்களை மத்திய அரசிற்கு அப்டேட் செய்கிறார்.

Related posts

Leave a Comment