கொரோனாவை தடுக்க மே 3 வரை விமான சேவைகள் ரத்து

புதுடில்லி : கொரோனா பரவலை தடுப்பதற்கான ஊரடங்கு நீட்டிக்கப்பட்டதையடுத்து, மே, 3ம் தேதி வரை விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

சீனாவிலிருந்து பரவ ஆரம்பித்த கொரோனா வைரஸ், இப்போது, உலகையே கதி கலங்க வைத்துள்ளது. வைரஸ் பரவலை தடுக்க, 21 நாள் ஊரடங்கு முடிய இருந்த நிலையில், வைரஸ் தொற்றின் தீவிரம் அதிகரித்து இருப்பதால், ஊரடங்கை, அடுத்த மாதம், 3ம் தேதி வரை நீட்டித்து, பிரதமர், மோடி அறிவித்தார்.

சர்வதேச, உள்நாட்டு பயணியர் விமான சேவைகளுக்கான ரத்தும், வரும், 3ம் தேதி வரை, நீட்டிக்கப்பட்டுள்ளது. கட்டணங்கள் ரத்துஊரடங்கு முடியும் வரை, சரக்கு சேவைகளுக்கான கட்டணங்கள் ரத்து செய்யப்படுவதாக, ரயில்வே அறிவித்துள்ளது.கொரோனா பரவலை தடுக்க, முதலில், 21 நாள் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. இந்த, 21 நாட்களில், அரசு மற்றும் தனியாருக்கு, சரக்கு சேவைகளுக்கான வாடகை உட்பட எந்த கட்டணமும் வசூலிக்கப்படமாட்டாது என, ரயில்வே தெரிவித்திருந்தது. இந்நிலையில், ஊரடங்கு, வரும், 3ம்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, சரக்கு போக்குவரத்து தொடர்பாக, எந்த கட்டணமும், 3ம் தேதி வரை வசூலிக்கப்படமாட்டாது என, ரயில்வே தெரிவித்துள்ளது.Related posts

Leave a Comment