வேலைக்கு உறுதி.. ஆனா சம்பள உயர்வு “இல்லை” : டிசிஎஸ் அதிரடி அறிவிப்பு..!

வேலைக்கு உறுதி.. ஆனா சம்பள உயர்வு “இல்லை” : டிசிஎஸ் அதிரடி அறிவிப்பு..!

இந்தியாவின் முன்னணி மென்பொருள் ஏற்றுமதி நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் கொரோனா பாதிப்பின் எதிரொலியாக ஒரு முக்கியமான முடிவை எடுத்துள்ளது. இந்நிறுவனத்தில் பணியாற்றும் 4.5 லட்ச ஊழியர்களுக்கும் வேலை இழப்புக் குறித்த பயம் வேண்டாம் என உறுதியாகக் கூறியுள்ளது.

ஆனால் தற்போது ஏற்பட்டுள்ள வருவாய் இழப்புகளைச் சமாளிக்கச் சில கடுமையான முடிவுகளையும் எடுக்க வேண்டிய கட்டாயத்தில் தள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

சம்பள உயர்வு

கொரோனா பாதிப்பின் காரணமாக நாட்டில் பல நிறுவனங்கள் தங்களது ஊழியர்களைப் பணிநீக்கம் செய்து வரும் நிலையில் டிசிஎஸ் தனது 4.5 ஊழியர்களுக்கு நம்பிக்கை கொடுக்கும் வகையில், யாரையும் பணிநீக்கம் மாட்டோம் என அறிவித்துள்ளது.

ஆனால் ஊழியர்களுக்கான இந்த வருடச் சம்பள உயர்வை முழுமையாக ரத்து செய்துள்ளது டிசிஎஸ் நிர்வாகம்.

40,000 ஊழியர்கள்

இதேபோல் நாட்டின் முன்னணி நிறுவனங்கள் தற்போது புதிய ஊழியர்களைப் பணியில் அமர்த்தும் முடிவை மறு ஆய்வு செய்து வரும் நிலையில் டிசிஎஸ் தற்போது பணி நியமனம் ஆணை கொடுக்கப்பட்ட 40,000 பட்டம் பெற்ற கல்லூரி மாணவர்களுக்கு உறுதியாக வேலைவாய்ப்பு கொடுக்கவும் உறுதி கொடுத்துள்ளது.

Related posts

Leave a Comment