ஊரடங்கை சமாளிக்க உதவும் உள்ளங்கள்

ஊரடங்கை ஏழைகள் சமாளிக்கும் வகையில், பல்வேறு தரப்பினரும், தொடர்ந்து உதவிக்கரம் நீட்டி வருகின்றனர்.

l தாம்பரம் நகராட்சியில், கொரோனா பரவல் தடுப்பு பணிகளில், நகராட்சியின் மருத்துவமனை ஊழியர்கள், தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அவர்களை, கவுரவப்படுத்தும் விதமாக, மேற்கு தாம்பரம், காமராஜர் நலச்சங்கம் சார்பில், நகராட்சியின் துாய்மை பணியாளர்கள், ஓட்டுனர்கள், மருத்துவமனை பணியாளர்கள் என, 550 பேருக்கு, அரிசி, எண்ணெய் அடங்கிய, நிவாரண பொருட்கள் இலவசமாக வழங்கப்பட்டன. புலிக்கொரடு பகுதியில், 100 தினக்கூலி தொழிலாளர்களின் குடும்பங்களுக்கும், நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டன.

l எண்ணுார் அனல்மின் நிலையம், ஸ்ரீ சிவா விஷ்ணு ஆலய நிர்வாகம் சார்பில், துாய்மை பணியாளர்கள், வட மாநில தொழிலாளர்கள், ஏழைகளுக்கு, 5 கிலோ அரிசி, காய்கறிகள், மதிய உணவு போன்றவை வழங்கப்பட்டன.

Related posts

Leave a Comment