தமிழகத்தில் கொரோனாவுக்கு 1372 பேர் பாதிப்பு; 15 பேர் பலி

சென்னை: தமிழகத்தில் இன்று (ஏப்.,18) மேலும் 49 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்தம் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1372 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 2 நாட்களாக உயிரிழப்பு இல்லாததால் பலி எண்ணிக்கை 15 ஆக உள்ளது.

சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: வளர்ந்த நாடுகளை விட தமிழகத்தில் சிறப்பாக கொரோனா தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இன்று 49 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை மொத்தம் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1372 ஆக அதிகரித்துள்ளது. அதில் 4 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளனர். இன்று 82 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். மாநிலத்தில் மொத்தம் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 365 ஆக உயர்ந்துள்ளது.

இன்று கூடுதலாக 3 சோதனை ஆய்வகங்களுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே அதிக சோதனை ஆய்வகங்களை (31) கொண்ட மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. முதல்வரின் அறிவுறுத்தலின் பேரில், ஆய்வகத்தை அதிகப்படுத்தி சோதனைகள் அதிகப்படுத்தப்பட்டுள்ளது. ஒரு நாளில் 5363 சோதனைகள் நடத்தப்படுகின்றன. இன்று அதிகபட்சமாக திருப்பூரில் 28 பேரும், சென்னையில் 7 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 35,036 சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ரேபிட் பரிசோதனை கிட்களை அதிக விலை கொடுத்து தமிழகம் வாங்கவில்லை. அதனை பரிசோதிக்க முறையாக பயிற்சி அளிக்கப்படுகிறது. இன்று முதல் ரேபிட் கிட்கள் மூலம் பரிசோதனை துவங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Related posts

Leave a Comment